வியாழன், 21 ஜூன், 2007

சந்தேகப்படாதீர் பெற்றோரே!





படிக்கும் வயதில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கலாம். அதில் இருந்தெல்லாம் நம்மைப் பாதுகாத்து அரவணைக்கத்தான் அப்பா & அம்மா இருக்கிறார்களே! ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியாவுக்குப் பெற்றவர்களே பிரச்னையாகிப் போனதுதான் வேதனை. படிப்பு மட்டுமல்லாமல் சொற்பொழிவு, கவிதை என்று பல துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த பிரியாவுக்கு அவளது பெற்றவர்களிடம் இருந்து கிடைத்த ஊக்கம், பூஜ்யம்தான்.


அதெல்லாம் கூட பரவாயில்லை.. ஒருமுறை வீட்டுத் தொலைபேசிக்கு ஊர் பேர் தெரியாத அனாமத்து கால் ஒன்று வர, அதன்பிறகு அவள் சந்தித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! எதிர்முனை மௌனமாக இருந்ததை மட்டுமே ஆதாரமாக வைத்து அவளை சந்தேக நெருப்பால் சுட்டெரித்தார்கள் அவள் பெற்றோர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரியா ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறி விட்டாள்.

அன்று மாலையே பிரியாவின் வீட்டுக்கு வந்த அவருடைய உறவினர், ‘‘ரெண்டு நாளா பல தடவை போன் பண்ணினேன்.. உங்க போன் என்ன ரிப்பேரா?’’ என்று கேட்க, காலம் கடந்து அழுது தீர்த்தார்கள் அந்த பரிதாபத்துக்குரிய பெற்றோர்கள்.

- ‘சே! இப்படியரு சங்கடம் எந்தக் குடும்பத்தில் நடந்தது?’ என்று கேட்கிறீர்களா? நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு மாணவி எடுத்த குறும்படம்தான் இது. படத்தின் பெயர் ‘வீணை’.

நன்றி : அவள்விகடன்

கருத்துகள் இல்லை: