புதன், 29 ஆகஸ்ட், 2007

இந்தியாவின் தேசிய மொழி என்ன ?

பதிப்புக்கு காரணம் : ஆர்குடில் தமிழ் சங்கமம் (Tamil Sangamam) என்கிற தனியினத்தில் நடந்த இந்தியாவின் தேசிய மொழி எது என்கிற வாக்கெடுப்பின் முடிவுகள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமது நாட்டின் தேசிய மொழி எது என்ற வாக்கெடுப்பில் தொடங்கி இன்று வரை பதிந்த வாக்குகள்.

மொத்தம் = 23 ஓட்டுகள்

தமிழ் = 8%
ஹிந்தி = 65 %
சமஸ்கிருதம் = 0%
ஒரு தனிப்பட்ட மொழிக்கும் இந்த அந்தஸ்த்து இல்லை = 26 %

இந்த கட்டுரையை நான் கண்மூடித்தனமாகவோ வெறித்தனமாகவோ எழுத முற்ப்படவில்லை.
65 % நமது தமிழ் நண்பர்கள் தெளிவுப்பெறசெய்வதற்கான சிறு முயற்சி.

மொழி

மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளிலே மிகவும் அரிதான உன்னத கண்டுபிடிப்பு.
மனிதனின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள உதவும் உன்னத சாவி.
அறிவாற்றல்,சிந்தனை,உணர்வுகளை சேமித்து அடுத்த சங்கதிக்கு கொண்டுச்செல்லும் பொக்கிஷம்.
நன்றி : ஆபத்தில் இருக்கும் மொழிகளின் ஆய்வுக்கட்டுரை அக்டோபர் 2000 (நமது செம்மொழி தமிழும் இதில் அடங்கும்)


1. இந்தியாவின் தேசிய மொழி எது ?

இந்தியா(Liberal Democracy, Unity in Diversity) சமய சார்ப்பற்ற மொழிபேதமற்ற பல தரப்பட்ட இனமக்கள் வாழ்கிற நாடு.இனம் என்றால் அதற்கேன தனிப்பட்ட கலாச்சாரம்,மொழி...என்று இருக்குமல்லவா!

இந்தியாவின் பலமே இது தான் வெவ்வேறு இன மத மக்கள் ஒருகினைந்து வாழ்தல்,

நாம் நம் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பவர்கள் தானே.

ஆகையால் எப்படி நாம் ஒரு தனிப்பட்ட மொழிக்கு
பொருந்தா அங்கிகாரத்தை கொடுப்போம், நமது சட்டமும் சொல்லவில்லை இன்ன மொழி தான் தேசியமொழி என்று,உங்களுக்கு சந்தேகம் இருப்பின்
இந்தியாவின் அலுவலக மொழிகள் வலைத்தளத்திற்கு சென்றுப்பார்த்தால் விளங்கும்,

2. ஏன் ஹிந்தி இந்தியாவின் தேசியமொழியாக இருக்ககூடாதா ?

இந்த கேள்விக்கான காரணமே தவறான புரிதலின் அடிப்படையிலானது.
என்ன அடிப்படை ?
ஹிந்தி என்கிற ஒரே மொழி தான் வட இந்தியா முழுவது பேசப்படுகிறது, சத்தியமாக இல்லை , மேலும் பாலிஉட் ஹிந்தி கனவு தொழிற்சாலையும் ஒரு மறைமுக காரணம்.

புள்ளிவிவப்படி அதாவது உண்மையான நிலை

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை = 1 பில்லியன்...

ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை : 337 மில்லியன்

வேற்று மொழி பேசுவோர் எண்ணிக்கை :663 மில்லியன்

வேற்று மொழி பேசுவோ எண்ணிக்கை தான் அதிகம் , ஆக இந்தியை தேசியமொழியாக்கினால் இங்கே இருக்கும் அத்தனை மக்களும்
அது ஒரு தேவையற்ற சுமையாகத்தான் இருக்கும்.
663 மில்லியன் மக்களும் தங்கள் தாய் மொழி,ஹிந்தி மொழி,ஆங்கிலம் இம்முன்று மொழிகளை கற்றவேண்டிய சூழல் தேவையற்றது ,பலனுமற்றது.

ஆகையால் நமது திறன் தேவையற்ற வழிகளில் விரயம் செய்யபடுகிறது.

குறிப்பு : மற்ற மொழிகளை கற்றக்ககூடாது என்று கூறமுற்படவில்லை , திணிப்பு
தவறு என்று தான் சொல்லவிளைகிறேன்.தேவையிருப்பின்,விருப்பமிருப்பின் யார் வேண்டுமானுலும் யார் மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.

ஹிந்தி மேல் வெறுப்பா ?
கண்டிப்பாக இல்லை , நம்மை(தமிழர்கள்) பொருத்தவரை ஹிந்தி என்பது ஜெர்மன்,சைனிஸ்,மராத்தி போன்ற மற்ற மொழி அவ்வளவே.

தேசிய மொழி ஹிந்தியாக இருந்தால் வணிகம் மற்றும் இதர பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் ??

பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் உள்ளது, ஆனால் பில்கேட்ஸ்க்கு ஹிந்தி தெரியாதே.
டாடா,ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் மற்றும் எனைய மாநிலங்களில் வணிகம் செய்கின்றனர் , அவர்களுக்கு தமிழ் தெரியாதே.
ஆகையால் விருப்பம் இருப்பின் தனிநபர் பயன்பாடு கருதி அவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே.

மற்றொன்று சொல்ல ஆசைப்படுகிறேன் , இந்தியா முழுவதும் ஒரே மதம் நிறுவி அனைவரையும் அந்த மதக்கோட்பாடுகளை பின்பற்ற செய்யலாமா ?
இதை செய்வதன் மூலம் எல்லோரும் ஒர் மதம் ஆகிவிடுவர் , மதசண்டனைகள் இருக்காது ? செய்யமுடியுமா ? நம்மால் ? மிருகத்தமாக தோன்றுகிறது அல்லவா அதேப்போல தான் மொழியை திணிப்பதும் .

ஹிந்தி தான் இந்தியாவின் தேசியமொழி என்று நானும் இந்த 65% நண்பர்களைப் போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

என்னை தெளிவுப்பெறச்செய்யத தளங்கள்
1. மூத்தமிழ் மன்றம்
2. தமிழ் மன்றம்

முடிவுரை :
நண்பர்களே , எந்த மொழியையும் குறைத்துக்கூறமுற்படவில்லை, நாம் நம் செம்மொழியாகிய தமிழ் மொழியை வழக்கில் வைக்க அதற்கு முக்கியத்துவம் நாம் அன்றி வேறு யாரும் கொடுக்கமுடியாதல்லா.தமிழர் தழிழர் உரையாட தழிழை பயன்படுத்துவோம் அவ்வளவே.
இதேப்போல நீங்களு உங்களை சூழ்ந்துள்ள நண்பர்களிடம் முறையாக கூறி விளக்குவீர் நமது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
நன்றி தோழர் தோழிகளே.