சனி, 8 மார்ச், 2014

கிழியாதா ? பணம்.

புழு துளையிடாத கத்தரி
நீரின்றி மணல்
மணம் மறக்கும் ஆறு
இனப்படுக்கொலைகளுக்கு
வித்திடும்
அணு உலைகள்
வீச்சு குறையாத
சாதி
சாயம் - நன்னீர்
கலப்பு திருமணங்கள்
அட்சதை போடும்
ஞெகிழி கூட்டங்கள்
மனமிறங்கா மனிதம்
இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது

கிழியாத பணத்தை நோக்கி.

முட்டைக்கு முன்

சில கனவுகள் கனவுகளாக இருக்க மட்டுமே மகிழ்ச்சி,
நினைவுகளின் வன்மை கனவுகளுக்கு பிடிக்காது.
அவை எப்போது அதன் வெப்பத்தில் நீந்திக்கொண்டிருப்பவை.
கனவுகளுக்கு தாங்கள் எப்போதும் கனவுகளாக இருக்கத்தான் ஆசை போலும்,
நாம் தான் அதனை உடைத்து கரு கொண்ட கவிதைகளாக மாற்ற முயலுகிறோம்,
கவிதைகளும் அழகு தான்            
ஏனென்னில்
கனவுகளின் வசிகரத்தை தொடுவதின் மூலம் தங்களை பொருள் படுத்திகொள்கின்றன.
பொருள் படுத்தும் எதுவும் நம்மை நிறைவு படுத்தும் என்பதனை உறுதியிட்டு கணிக்க இயலாது.
ஆகவே எனது மன நிறைவை

கனவிலிருந்து கவிதைகளாய் உருமாறும் கர்ப்ப காலத்தில் புதைத்து வைக்கிறேன்.

நித்தமும் யுத்தம்

எண்ணப் படுகொலைகளுக்கு பின்
சில எண்ணங்களில் ஒன்று மட்டும்
முந்தி போய் கருவறையில் சேர்ந்தது.
உருவம் பெற உழைத்தாக வேண்டும்.
வெற்றியின் கொடூர வடிவம், அகங்காரம்.
அதனை நீர்த்து போக நித்தமும் யுத்தம்
எண்ணப் படுகொலைகளுக்கு பின்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

காட்சியளித்தவள்


மணி சுமார் மதியம் 12:30 இருக்கும் ,எதர்ச்சையாக நான் அந்த ஓட்டலுக்கு செல்ல நேர்ந்தது.எனக்கு பசியில்லை,ஆனால் உடன் வந்தவர்கள் ஏதாவது
சாப்பிட வேண்டும் என்பதால் நானும் ஓட்டலுக்குள் இழுத்து வரப்பட்டேன்.எனக்கு ஒரே ஒரு காபி போதும் என சொல்லிவிட்டு மற்ற மேஜைகளில் என்ன
என்ன சாப்பிடுகிறார்கள் என நோட்டமிட கண்கள் கிளம்பியது.

எனது இடபுற மேஜையில் கைலி கட்டிக்கொண்டு,வெள்ளை சட்டையணிந்த,மிதியடிகளை கழற்றிய நிலையில்,
இடது கையில் பெரிய அப்பளத்தை பிடித்துக்கொண்டு ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
பசி மிக அதிகம் போல,சாப்பிடுவதில் மிகுந்த கவனம் கொண்டு, அக்கம் பக்கம் பார்க்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சாம்பார் சாதம் சாப்பிட்டு முடித்த தருவாயில் தான் நான் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்,தட்டில்
இன்னும் சில உருண்டைகள் சாம்பார் சாதம் இருக்கும் போதே காரக்குழம்பை ஊற்றி மீதி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

எனக்கு ஒரே ஆச்சரியம் , இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்டலாம், எனக்கு ஆச்சரியம் தான், ஏன் என்றால் என்னால் அவ்வளவு பெரிய
அப்பளத்தை உரு கொலையாமல் இடது கையில் பிடித்து பசி வேளையில் சாப்பிட முடியாது, நான் 4-5 பாகங்களாக அப்பளத்தை உடைத்து சோற்றுடன்
சேர்த்து சாப்பிடுவேன்.வலது கை பசிக்காக போரடி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது,இடது கை மெதுவாக,சாந்தமாக அப்பளத்தை ஏந்தி பிடித்திருப்பது
எனக்கு சாத்தியமில்லாத காரியம்,பசியின் தாக்கம் எனது இட கையிலும் நுழைந்து அப்பளத்தை நொருக்கியிருக்கும்.

ஒரு வழியாக வெள்ளை சாதம் காலியானதும் மீதமுள்ள அப்பளத்தை ருசித்துவிட்டு ,பசியை வெற்றி கண்டவராக செருப்பை அணிந்து கொண்டு இருக்கையில்
இருந்து எழுந்தார்.அதுவரை அவர் மறைத்து வைத்திருந்த என் பார்வையில் படதா,பார்வையரற்றவர்கள் பயன்படுத்தும் ஊன்றுகோலை தரையில் தட்டி தட்டி கை
அலம்பும் இடத்தை தாண்டி நடந்துக்கொண்டிருந்த போது ஓட்டலில் பணி புரியும் பெண்களில் ஒருத்தி ஓடிச்சென்று அவரை கை அலும்ப செய்துவிட்டு
அவரை ஓட்டலுக்கு வெளியே சென்று விட்டாள், உள்ளே வரும் போது அவள் மிகவும் அழகாக தேன்றினாள்,ஆம் அந்த நேரம் அங்கே சாப்பிட்டு கொண்டு
இருந்தவர்களையும், சப்ளை செய்து கொண்டிருந்தவளையும் சேர்த்து, ஏன் அதையும் விட அவள் அழகியாக, பேரழகியாக எனக்கு காட்சியளித்தாள்.

காட்சியளிப்பது கடவுள்களின் வேலை மட்டும் இல்லை என மறுபடியும் எனது அககண்கள் உறுதிபடுத்திக்கொண்டன.

செவ்வாய், 22 நவம்பர், 2011

ச்சீ

சீறு
பாய்
பிறாண்டு
கடி
வீல் என கத்தித் தொலை
தேவைப்படும் போது
வால் ஆட்டி நடி
நித்தியானந்த துறவு க்குள்
நினைத்த போது
உறவு கொள்ள
தெரியாமல் தேடி அலைந்த பின்
வியர்வை காய் ய துரோக நிழலில்
ஓய்வெடு
இத்தோடு நிறுத்திக் கொள்
கல் எறியாதே
என் மேல்
என்னாவது என் மானம்
ச்சீ மனிதா.

கேசுவர்