வியாழன், 28 ஜூன், 2007

சைனாகார்களின் புதிய மொபைல் போன்



எப்போது பயன்படுத்தாமல் இருக்கிறேமோ அப்போது பாயைப்போல சுருட்டி வைச்சுக்கிலாம்...




டிசைனர் : யுவான் லியங்கு

நன்றி :

செம்மொழி - Classical Language

செம்மொழி என்பதன் பொருள் என்ன ?
செம்மொழி என்பதன் பொருள் ஒரு மொழியின் இலக்கியப்பழமை என்பதே ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்)
மேலும் ஜோர்ஜ் எல்.ஹார்ட் கூறியவையில் சில ...
தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)"

உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")

தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையொட நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலை நிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்.

சரி யார் இந்த ஜோர்ஜ் எல்.ஹார்ட் என்று கேட்கிறார்களா ?

அமெரிக்காவில் பெர்க்லி (Berkeley)வளாகத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் வறார்ட்.
மேலும் அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள
http://en.wikipedia.org/wiki/George_L._Hart

http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilChair.html

தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை ஜோர்ஜ் எல்.ஹார்ட்
இங்கே -
http://www.tamilnation.org/literature/classical.htm#Tamil_Translation

நன்றி விக்கிப்பிடியா,தமிழ்நெஷன்,பெர்க்லி

திங்கள், 25 ஜூன், 2007

கிளியோப்பட்ரா - பாகம் 4

ரோமானியர்களும் டோலமிகளும்
ஒரு பக்கம் நம்ம கிளி பாடம் கத்துக்கிட்டு இருக்க,அதே காலகட்டத்தில தான் சக்திவாய்ந்த மூம்முர்த்திகளான
ஜுலி சீசர்,பாம்பி மற்றும் கிரேஸஸ் ரோமாபுரியை ஆண்டுவந்தனர்.
பாம்பு எப்படி எகிப்தியரின் புனித சின்னமாக கருதப்பட்டதோ அதேப்போல கழுகு தான் ரோமானியர்களின் சின்னம்.
பின்னே சாம்ராஜ்ஜியமனு இருந்தா இந்த மாதிரி சின்னங்கள் இருப்பது எல்லாம் சகஜமான ஒன்னுதான !

பேராசை பிடித்து சண்டை போட்டு மற்றவர்களின் இடத்தை பிடித்தல் என்பது போருக்கு இன்னொரு அர்த்தமாக இருந்தது.இதில் ரோமானியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ?

எகிப்தின் வளம் டலாலடிக்க * * * அது ரோமானியர்கள் கண்னை உறுத்தாமல் இருக்குமா என்ன ?

இதனை அறிந்த நம்ம கிளியோட தந்தையாருக்கு உதார் எடுக்க ஆரம்பித்துவிட்டது.எதை சமாளிப்பது ஏற்கனவே
உள்நாட்டு கலவரம் அங்காங்கே தலைதுக்கதுவங்கியது,
மத்தலம் ஆகிடாரு நம்ம பன்னிரண்டாம் டோலமி.ஒருபக்கம் எகிப்து மக்கள் இன்னொரு பக்கம் ரோமானியர்கள்
தன்னை காப்பாத்திக்க ரோமானியர்கள் காலை முத்தமிட முன்வந்தார் நம்ம கிளியோட தந்தை.

அப்பே கிளிக்கு 10 வயசு இருக்குமுனு நினைக்கிறேன், கிளியின் தகப்பனார் ரோமானிய மூம்முர்த்திகளுக்கு ஒரு மடல்
வரைந்தார் ,அதுதாங்க மெயிலுனு ஆங்கிலத்தில சொல்லுவாங்கல

அந்த கடிதம் எப்படி இருந்திருக்குனுமுனு ஒரு கற்பனை

இடம் : டோலிமிகளின் மாளிகை


சக்தி படைத்த மூம்முர்த்திகளுக்கு,

இந்த சிறியவன் பன்னிரண்டாம் டோலமியின் அன்பான வணக்கம்.மூம்முர்த்திகளின் வீர தீர பராகிரம செயல்களை அறியாதவன் இல்லை இந்த பொடியன்.உங்களை எதிர்க்கும் துணிவும் தைரியமும் எகிப்திற்கு கொஞ்சமும் இல்லை அரசே, ஆகையால் நீங்கள் அனாவசிய கவலை கொள்ள தேவையில்லை அய்யா.
அப்பால ஒரு சின்ன வேண்டுகொள் , இப்பேயெல்லாம் மொத மாதிரி விளைச்சல் சொல்லிக்கிறப்பால பெரிசா ஒன்னும் இல்லை சாமியோ, இந்த எகிப்து பயலுங்க எதுக்கெடுத்தாலும் அரசர்களை சரியில்லை அரசர்களை சரியில்லைனே புலம்புறாங்க.
மழை பெயலனா கூட என் மேல குத்தம் சொல்லாறங்க சாமி, இந்த கொடுமைய நான யார்கிட்ட சொல்லி அழ.இந்த சமயத்தில நீங்க வேற போருனு வந்தா என் நிலைமை ரொம்ப மோசம் ஆகிடும் .அதனால ஏதாவது பார்த்து பண்ணுங்க ஜி.


இப்படிக்கு,
உங்கள் நேர்மையான விசுவாசி , அமைதிவிரும்பி,
பன்னிரண்டாம் டோலமி.



தொடரும் .....அடுத்த பதிப்பில் ரோமானியர்கள்கிட்ட இருந்து வந்த ரிப்ளை மெயில பார்ப்போம்...

வெள்ளி, 22 ஜூன், 2007

முதுமையை புரிந்துக் கொள்வோம்


வைதேகி தேசிகன்

ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. இப் பட்டியலில், 'முதியோர்' முக்கிய இடங்களைப் பெறுகின்றனர்.
தானாய் வந்த இந்த வாழ்க்கையைத் தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் வாழ்ந்து, அந்திமக் காலத்தில் பெரும் எதிர்பார்ப்புகளும், எதிர்பாராத தோல்விகளுமாக நாள்களைக் கழிக்கிறார்கள்.

இந்தியாவில் கூட்டுக் குடும்ப அமைப்பு நொறுங்க, நொறுங்க முதியோர்களின் சோகம் அதிகரித்து வருகிறது.

மேலை நாடுகளில் இளமைக் காலத்திலேயே தமது முதுமைப் பருவத்தைத் திட்டமிடும் போக்கும், முதுமையில் யார் தயவையும் எதிர்பாராமல் தாமே முதியோர் இல்லங்களில் கட்டணம் செலுத்தி அடைக்கலம் தேடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மிகவும் உணர்வுப் பூர்வமான இந்தியாவில், இரண்டு தலைமுறைகள் மோதிக் கொண்டேயிருக்கின்றன.

ஏன் இப்படி ஒரு நிலை. இதற்குக் காரணம் இன்றைய நடுத்தர வயதினர் மட்டுமல்ல முதியோர்களும்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் மட்டும்தான். மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் எல்லோருமே சம்பாதிக்க வேண்டிய நிலை. மிகவும் முடியாத வயதானவர்கள் தவிர எல்லோருமே உழைக்க வேண்டும். ஓயாமல் வேலை செய்து களைத்துப் போனவர்கள் ஒரு பிடி சோறு கிடைத்தவுடன் தூங்கப் போய் விடுவார்களே? பின்பு ஏது பிரச்சினை? அதே போல வசதி மிகுந்த குடும்பங்களில் அவரவர் வேலை அவரவர்களுக்கு. அதனால் வீண் பிரச்சினைக்கே இடமில்லை.

வயது ஏற ஏற தன்னைத்தானே உணர்ந்து கொள்ளத் தெரிய வேண்டும். தன் நிலை புரிய வேண்டும். கையில் ஏதாவது பணமிருந்தால் அது தான் இருக்கும் வரை வேண்டுமே என்ற எண்ணத்துடன் பத்திரப்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.

தன் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும், தங்களின் வார்த்தைகளைக் கேட்டு நடக்க வேண்டும் என்று எண்ணும் பெரியவர்கள், தங்களின் பிள்ளைகளை முழுமையாகப் புரிந்து கொண்டோமா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து அதற்கு தன்னால் எப்படி தீர்வு காண முடியும் என்பதையும் ஆலோசிக்க வேண்டும். அதே போல இனி நாளை முதுமை என்னும் 'அந்தி' நேரத்தில் காலடி எடுத்து வைக்கப்போகும் இன்றைய நடுத்தர வயதினர் முதியவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயல்வதுடன் - குடும்ப விஷயங்களை மனம் விட்டுத் தன் பெற்றோரிடம் பேச வேண்டும். அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனாலும், தன் பிள்ளைகள் தங்களின் கருத்துகளைக் கேட்கிறார்களே என்ற ஒரு நிறைவு அவர்களுக்குத் தரும் வழி இது. பிரச்சினை இல்லாத வீடு எது? நாம் நினைத்தால் எத்தனையோ பிரச்சினைகளிடையே நம்மைப் பெற்று வளர்த்தவர்களை அவர்கள் கடைசி காலத்தில் காப்பாற்றுவது நம் கடமையில்லையா?

சென்னை நீலாங்கரையில் உள்ள 'விச்ராந்தி' என்னும் வயது முதிர்ந்த பெண்களுக்கான முதியோர் இல்லத்தைத் துவங்கி நடத்தி வரும் திருமதி. சாவித்திரி வைத்தி அவர்களிடம் 'விச்ராந்தி' பற்றிக் கேட்டபோது....

'இன்று 'விச்ராந்தி' யில் 110 வயது முதிர்ந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் படுத்த படுக்கையாக எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ள பெண்களும் உண்டு. முன்பெல்லாம் ஆதரவற்றவர்களும், ஆண் வாரிசு இல்லாதவர்களும் மட்டும் தான் இதில் சேருவதற்காக வந்தனர். பின்னர் மகனை இழந்த அன்னையர்கள் சேர்ந்தனர். ஆனால் இன்றோ மகன் உயிருடன் இருக்கும் போதே ஒதுக்கப்பட்டு வந்து சேர்பவர்களும் உண்டு. வேறு வழியே இல்லை என்று விதியை நொந்து வருவோரை சேர்த்துக் கொள்ளாமல் என்ன செய்வது?

எல்லாப் பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் பாட்டிகளுக்குப் புதிய துணிமணிகள் தரப்படும். நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஜனவரி முதல் தேதியும் பிரமாதமாகக் கொண்டாடப்படும்.

படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்குப் பணி செய்ய ஆட்கள் உள்ளனர். இங்குள்ளவர்கள் இறந்து போனால் அவர்களின் விருப்பப்படி ஈமச்சடங்குகளும் செய்யப்படும்'' என்றும் திருமதி. சாவித்ரி வைத்தி தெரிவித்தார். அவரே தன் கைகளினால் ஈமச்சடங்குகளையும் செய்கிறார் என அறிந்தபோது மனம் நெகிழ்ந்து போனது. முதுமையைப் புரிந்துகொண்டு, அதை வரவேற்க நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம்.

நன்றி : ஆறாம்திணை

வியாழன், 21 ஜூன், 2007

சந்தேகப்படாதீர் பெற்றோரே!





படிக்கும் வயதில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கலாம். அதில் இருந்தெல்லாம் நம்மைப் பாதுகாத்து அரவணைக்கத்தான் அப்பா & அம்மா இருக்கிறார்களே! ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியாவுக்குப் பெற்றவர்களே பிரச்னையாகிப் போனதுதான் வேதனை. படிப்பு மட்டுமல்லாமல் சொற்பொழிவு, கவிதை என்று பல துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த பிரியாவுக்கு அவளது பெற்றவர்களிடம் இருந்து கிடைத்த ஊக்கம், பூஜ்யம்தான்.


அதெல்லாம் கூட பரவாயில்லை.. ஒருமுறை வீட்டுத் தொலைபேசிக்கு ஊர் பேர் தெரியாத அனாமத்து கால் ஒன்று வர, அதன்பிறகு அவள் சந்தித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! எதிர்முனை மௌனமாக இருந்ததை மட்டுமே ஆதாரமாக வைத்து அவளை சந்தேக நெருப்பால் சுட்டெரித்தார்கள் அவள் பெற்றோர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பிரியா ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே வெளியேறி விட்டாள்.

அன்று மாலையே பிரியாவின் வீட்டுக்கு வந்த அவருடைய உறவினர், ‘‘ரெண்டு நாளா பல தடவை போன் பண்ணினேன்.. உங்க போன் என்ன ரிப்பேரா?’’ என்று கேட்க, காலம் கடந்து அழுது தீர்த்தார்கள் அந்த பரிதாபத்துக்குரிய பெற்றோர்கள்.

- ‘சே! இப்படியரு சங்கடம் எந்தக் குடும்பத்தில் நடந்தது?’ என்று கேட்கிறீர்களா? நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு மாணவி எடுத்த குறும்படம்தான் இது. படத்தின் பெயர் ‘வீணை’.

நன்றி : அவள்விகடன்

செவ்வாய், 19 ஜூன், 2007

மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி - சந்திரபாபு


சந்திரபாபுவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் கேட்டபோது ''எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன் 'கவலை இல்லாத மனிதன்னு' ஒரு படத்தை சந்திரபாபுவை வெச்சி கண்ணதாசன் எடுத்தாரு. அந்த படத்தை ஆரம்பிச்ச பிறகுதான் கவிஞர் கவலையுள்ள மனிதன் ஆனாரு. அந்த படத்துக்கு நான் தான் மியூசிக் போட்டேன். சந்திரபாபு எங்கிட்ட வந்து கே.எல்.சைகால் பாணில எனக்கு ஒரு பாட்டு போடுங்கன்னான். அப்படி போட்ட பாட்டுதான் ''பிறக்கும் போதும் அழுகின்றாய்'' பின்னாடி பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்ட மக்களை சண்டிகரில் சந்திக்க போனபோது, கவிஞரும் வந்திருந்தார். சந்திரபாபு தென் இந்தியர்களான அந்த மக்களிடம் −ந்த பாட்டை பாடினது −ன்றும் நெஞ்சில் நிழலாடுது. பிறகு −தே பாட்டை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்னாலயும் பாடினான். யதார்த்த உலகில் நடிக்காத திறந்த புத்தகம் அவன்'' - என்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

நன்றி : ஆறாம் திணை

ஞாயிறு, 17 ஜூன், 2007

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 3

டோலமிகளின் எகிப்து - 305-30 நடப்பு யுகத்திற்கு முன்னர் (BCE - Before Current Era or BC)

டோலமிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எகிப்தியரின் அரசமுறைகளை பின்பற்ற தொடங்கினர்.தங்களை எகிப்தின் ப்பரோக்களாக சித்தரித்துக்கொண்டனர்.

ப்பரோக்களைப்பற்றி சொல்லனுமுனா ....

ஏலே கேஷ்வரு நிறுத்தப்பா ! நீ போற போக்க பார்த்தா கதை கலியுகத்தை தாண்டி ஓடும் போல ,
ஆதனால் சுருக்கமாக சொல்லிபுடுறேன் ப்பரோக்கள்னா எகிப்தின் வம்சாவளி அரசர்களுனு வச்சிக்கலாம்.
இவர்கள் கடவுளரின் மறு அவதாரமாக கருதப்பட்டனர்.ஆளும் அரசர்கள் கடவுளராக உருவகப்படுத்ப்படுவார்கள்.(அப்பத்தான் மக்கள் பயப்படுவார்கள் நல்ல டிரிக்).
நமக்கு ஏன் இந்த வம்பு ,,,இதோ வரனேன் கிளி (கிளியோப்பட்ராவை இனி செல்லாமா கிளினு கூப்பிடலாம் ).

பசு தோல் போர்த்திய புலியாக டோலமிகள் எகிப்து மக்களின் நம்பிக்கையை பெற்று(முழுமையா இல்லைனுதான் சொல்லனும்)
கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்றால் பாருங்களேன் அவர்களின் சமார்த்தியத்தை.
சுயத்தை இழந்து ஆட்சி சுகத்தை அனுபவிதவர்கள் என்றால் மிகையாகது.

இவர்களிடையே காணப்பெற்ற மற்றொரு குழப்பம் என்னனா ,
ஆண் வாரிசுகள் எல்லாம் டோலமிகள்
பெண் வாரிசுகள் எல்லாம் பெரும்பாலும் கிளியோப்பட்ராவாகத்தான் இருக்கும்.

ஒருவேளை பெயர்களுக்கு தட்டுப்பாடு இருந்திருக்குமோ ?

புதியதல்ல இது டோலமிகள் குடும்பத்திலும் அரசியல் நுழைந்து சில டோலமிகளையும் சில கிளியோப்பட்ராக்களையும் அழித்தது.
அப்படி இப்படினு ஒருவழியாக பன்னிரண்டாம் டோலமிக்கும் ஐந்தாம் கிளியோப்பட்ராவுக்கும் டும்டும் பிபி நடந்துசு.
இவங்க தான் நம்ம கதாநாயகியின் அப்பா-அம்மா.

புனைப்பெயர் டோலமிகள்
டோலமிகள் தங்களுக்கு தாங்களே புனைப்பெயர் வச்சுகுவாங்க நம்ம புது கவிதை கவிகள் மாதிரி.(மன்றகவிகள் கோவித்துக்கொள்ளதாதிங்க)
நம்ம கிளியோட அப்பா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ? அவரு தன்னை "புதிய டைய்ன்சஸ்" னு அழைச்சுகிட்டாரு.
டைய்ன்சஸ் - திராட்சை ரசம்(மிளகு ரசம் மாதிரி இல்லைங்க...இது அது ...அதுதாங்க வோய்னு ஆங்கிலத்தல சொல்வாங்களே),பெண்கள் மற்றும் இசையின் இவைகளின் கிரக்ககடவுளாம். ஒருவிததில் பார்த்தா இவருக்கு இந்த பேரு ரொம்ப பொருத்தமானது தாங்க என்னா இவரு எப்ப பார்த்தாலும் குடி கும்மாளமுனு தான் இருப்பாரு(பார் ரு).
இதனால என்னோ எகிப்து மக்களிடம் கிளியோட தந்தையாருக்கு பெரிதா ஒன்னும் புகழ் இல்லை.கிளியோட அம்மாவைப்பற்றி அவ்வளவாக வரலாற்றில் பார்க்கமுடியல்ல.
ஒருவேளை அவுங்க சிக்கிரமா இறந்திருக்கலாமா ?! ஒரு அனுமானம் தாங்க !


கிளியோட அக்காமார்கள் & தம்பிமார்கள்
கிளியோட அப்பா அம்மாவைப்பற்றி போதுமான அளவு அலசிட்டதால, இப்போ நாம கிளியோட சகோதர சகோதரிகளை பார்ப்போம்.
நம்ம கதாநாயகியோட சேர்த்து மொத்தம் 6 உருப்படிங்க. 4 - பெண் குழந்தைகள், 2 - ஆண் குழந்தைகள்.

முதல் குழந்தை - பெண் - இவுங்க பேரு ஆறாம் கிளியொப்பட்ரா , இவுங்க எண்ணம் நான் எப்போ ராணியா ஆவேன் !!!
இரண்டாம் - பெண் - இவுங்க பேரு பேரிய்ன்ஸ் , இவுங்க எப்போ ஆறாம் கிளியொப்பட்ரா கிளம்புவாங்க திண்னை காலியாகும்னு நினைப்பு.
மூன்றாம் - பெண் - இவுங்க தானுங்க நம்ம கதாநாயகி ஏழாம் கிளியோப்பட்ரா , இறாவ புகழ் பெற்ற கிளி.
நாலாவது - பெண் - இவுங்க பேரு அரிஸோன்
ஐந்தாவது - ஆண் - இவரு பேரு டோலமி
ஆறாவது - ஆண் - இவரு பேரு டோலமி


கிளியோட பள்ளி பருவம்
பள்ளிக்கு சென்று படிக்கறது எல்லாம் அவுங்களுக்கு கவுரக்குறைச்லோ எனவே , கிளியோவிற்கு கல்வி சொல்லிக்கொடுக்க
பல ஆசிரியர்கள் அலெக்சாண்ரியாவுக்கு வரவழைக்கப்பட்டனர்.அப்புறமா மாளிகைக்கு சோற்றாங்கைப்பக்கமா உள்ள டீக்கடைக்கு
பக்கத்தில தாங்க இருக்குது அந்த புகழ்ப்பெற்ற மியுசியம்.மியுசியம்கிற சொல் கிரக்கதில இருந்து வந்த சொல்,கிரக்கதில் இதற்கு
மியுசஸ் என்கிற பெண் கடவுளின் வீடாம், நம்ம சரஸ்வதி சாமி மாதிரி கிரக்கர்களின் கலை மற்றும் படிப்பின் கடவுளாம்.
மியுசியத்திற்கு வரும் பெரும் தலைகளில் சிலர் மாளிகைக்கி கேஸ்ட் லக்சரர்களாக அழைத்து வரப்படுவார்களாம்.
இப்படியாக கல்வி கத்துகிட்டாங்க நம்ம கதாநாயகி.

குறிப்பு : நடப்பு யுகத்திற்கு முன்னர் என்ற மொழிப்பெயர்ப்பு சரியானாத என்று சந்தேகம் உள்ளது தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்தலாமே !

தொடரும்.

கிறுக்கனின் கிழிசல் - கனவின் தூது

வியாழன், 14 ஜூன், 2007

கிறுக்கனின் கிழிசல் - மெழுகுவர்த்தி

கிறுக்கனின் கிழிசல் - 7

கிறுக்கனின் கிழிசல் - 6

காத்திடுவேன் கவலை வேண்டாம்
கன்னி இவளை பெற்றதினால் - அம்மா
மீண்டும் சொல்கிறேன்
கவலை வேண்டாம்
நல்கல்விக்கொண்டு காத்திடுவேன்

கிறுக்கனின் கிழிசல் - 5

கற்கள் முட்கள் சொற்கள்
தாண்டி வந்தேன் உனக்காக.
என்னவனே,
உன் ஆரவனைப்பில்
உணர்ந்தேன் அன்பின் அர்த்தம்

வருத்தம் தீர்த்தாய்
உன் சுவாசம் நானாக
கர்வத்தோடு செல்லுவேன்
கொடுத்துவைத்தவள் நானென்று.

கிறுக்கனின் கிழிசல் - 4

மெய் மறந்து
பிதற்றுகிறேன் உன்னைப்பற்றி.
இவர்கள் கூறுகிறார்கள்
இதை கவிதையன்று

கிறுக்கனின் கிழிசல் - 3

காதலி
கண் இமைக்கும் வரையிலாவது
என்னை காதலி
கணப்பொழுது சுகமாகும்
ஆகையால் என்னை காதலி

கிறுக்கனின் கிழிசல் - 2

காதலியைப் போல
வரைய முற்பட்டேன் கவிதையை
தோற்றுப்போனால் காதலி

கிறுக்கனின் கிழிசல் - 1

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 2


புட்டோலமிகள் பற்றி

அலெக்சாண்டர் என்னும் மாவீரனை யாரும் மறக்கமுடியாது...ஆம் சும்மா போரும் படையுமா இருப்பாரே
அதே பாரகிரமசாலி அலெக்சாண்டர் தான்.இவரு எகிப்தையும் விட்டுவைக்கவில்லை,எகிப்தின் அரசனாக தன்னை மகுடம் சுட்டிக்கொண்டார்.
இந்த அலெக்சாண்டருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு என்னா ? எந்த நாட்டைப் புடிச்சாலும் அங்கே
அலெக்சாண்ரியா என்னும் நகரத்தை உருவாக்குவாரு !!!!
நம்ம அலெக்ஸ் மண்டயப்போடும் போது மொத்தம் 29 அலெக்சாண்ரியா நகரங்கள் இருந்தாதாகச்சொல்லப்படுகிறது.
என்ன கொடுமை அலெக்ஸ் !!!

அந்த 29 அலெக்சாண்ரியா நகரங்களிலே மிகவும் அழகானதாக கூறப்படும் நகரம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாத்தானாம் !!!
பாவம் நம்ம அலெக்ஸ் போர் போருனு சுற்றி.. இதனை அனுப்பவிக்கமுடியாம 33 வயசிலே இறைவனடி சேர்ந்தார்.

என்னடா இவன் கிளியோப்பட்ராவில் ஆரம்பிச்சு அலெக்சாண்டர் கிட்டப்போறானு தோன்னுதா ,இதோ வரேன்...எல்லாம் ஒருக்காரணமாத்தான் .

நம்ம அலெக்ஸ்க்கு பலதளபதிகள் உண்டு , அதில் ஒருவன் தான் புட்டோலமி, இந்த மவராசன் தான்
நம்ம கிளியோடா மும்பாட்டனாருனு சொல்லாம்.அலெக்ஸ்க்கு பின்னால் ,எனக்கு உனக்குனு ஆரம்பித்தது ஆட்சிச்சண்டை,
சாமர்த்தியசாலி புட்டோலமி லாவகமாக எகிப்தை சுருட்டிக்கொண்டார் !!!

புதன், 13 ஜூன், 2007

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 1

பதிவுக்கு காரணம் :சமிபத்தில் படித்த புத்தகம் அவ்வளவே.
குறிப்பு : இதில் எதேனும் தவறு இருப்பின் நண்பர்கள்,சான்றோர்கள் உதவீர்கள் என்ற எண்ணத்தில் யதார்த்த நடையில் நான் படைக்கும் முதல் சரித்திரச்சம்பந்தப்பட்ட பதிப்பு.

இனி கதைக்கு போகலாமா ?

ஆமாங்கா நீங்க சரித்தான் ! கழுதைப்பாலில் குளித்தாக சொல்லப்படும் கிளியோப்பட்ராவேதான்.


கிளியோப்பட்ராவைப்பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு காலக்கட்டத்தில் நிலவின.

அவை..,


நீங்கள் நினைப்பது போல நம்ம கதாநாயகி ஒன்னும் பேரழகியெல்லாம் இல்லையாம் !!! சற்று குள்ளம் , சற்று பருமனான உருவம் , ஆனால் மிகவும் புத்திசாலியாம் !!!!:)

  1. ஒன்பது மொழிகள் பேசுபவள் !!!
  2. பல புத்தகங்கள் எழுதியுருக்கிறாள்.
  3. எகிப்தின் கடைசி ராணி.
  4. 19 வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவள்.
  5. பல ஆண்டுகள் , இரண்டு ரோமானியர்களின் துணைக்கொண்டு ஆட்சி செய்தவள்.

கிளியோவின் மூதாதையைர்கள்
கிளியோப்பட்ரா எகிப்தின் ராணி, ஆனால் அவளின் புர்விகம் மசிடோனியா.

அவளின் குடும்பப்பெயர் புட்டோலமி(Ptlomy),புட்டோலமிகள் மசிடோனியாவாசிகள்.

புட்டோலமிகள் 300 வருடங்கள் எகிப்தில் இருந்தாலும் அவர்களை எகிப்து மக்கள் வேற்று நாட்டவராகத்தான் கருதினர்.! :(

புட்டோலமிகள் பற்றி ஒரு சில செய்திகளை அடுத்தபதிப்பில் ....

நன்றி : படங்கள் விக்கிப்பிடியா.
நன்றி : இறவா புகழ்ப்பெற்ற கிளியோப்பட்ராவும் அவளின் பாம்பும்...(சரியா மொழிப்பெயர்த்திருக்கேனா : :)
(Dead Famous Clepatra and her Asp)

செவ்வாய், 12 ஜூன், 2007

பழங்களில் உள்ள சத்துகள்

மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.

ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்
பப்பாளிப் பழம்
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நெல்லிக்கனி
வைட்டமின் சி
600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

கொய்யாப்பழம்
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.
சாத்துக்குடி
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
எலுமிச்சை
கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
கறுப்பு திராட்சை
வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை
வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.
போரிச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
சப்போட்டா
மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
வாழைப்பழம்
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.
ஆப்பிள்
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.
தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.
புளி
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
சீத்தாப் பழம்
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம் பழம்
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.

நன்றி Modern Tamil World

யுகம்

யுகம் என்றால் என்ன ?

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:

  • கிருதயுகம்
  • திரேதாயுகம்
  • துவாபரயுகம்
  • கலியுகம்

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

நன்றி விக்கிபீடியா


வியாழன், 7 ஜூன், 2007

வாசிப்பது கிறுக்கன் - பணவீக்கம் ? எளிமையான விளக்கம் !

இது வணிக உலகதில் புதிதாக கால்லேடுத்துவைப்பவர்களுக்கு ....

எப்போதோ படித்தது உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே வெட்டி ஒட்டியிருக்கேன்.

பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ§களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ‘வெயிட்டை’ அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
------------
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.


நன்றி : நாணயவிகடன்
பதிப்பு : மார்ச் 2007