மரணம் சோகமானது; அதனினும் தற்கொலை மிகவும் சோகமானது. சோகத்தின் உச்சகட்டம் என்றே கூறலாம். இந்தத் தற்கொலை சமாச்சாரங்களெல்லாம் மனித வரலாறு ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. காரணங்கள் பல்வேறு தரப்பட்டவையாக இருக்கலாம். காதல் தோல்வி, கடன் பிரச்னை, மனசு மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய்க் கொடுமைகள். ஏன் சமயங்களில் பரீட்சையில் தோல்வி போன்ற விசித்திரங்களும் தற்கொலைக்குக் காரணமாவதை நாம் பார்க்கிறோம். கேட்கிறோம்.
Self Murder என்ற அர்த்தமுள்ள லத்தீன் மொழி வார்த்தையே Sucide என்பது. எப்படித்தான் துணிந்தார்களோ; எப்போது முடிவெடுத்திருப்பார்கள். எங்கிருந்து வந்தது இத்தனை தைரியம்(?) இது போன்ற நாமெல்லாம் ஒரு சில நிகழ்வுகளைப் பார்த்து அவ்வப்போது யோசிப்பதில்லையா? விஷயம் என்னவென்றால், செத்துப் போகலாம் என்ற முடிவை சம்பந்தப்பட்டவர்கள் ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே எடுத்திருப்பார்கள். மெல்லமனதில் அசை போட்டவாறே (?) தகுந்த சந்தர்ப்பத்துக்காகவோ அல்லது வேறெதற்காகவோ காத்திருப்பா£கள். ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். வேறு சிலரோ கண நேர முடிவு என்பார்களே அது போல... திடீரென்று ஓர் இக்கட்டான, உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் ஒரு வீனீஜீuறீsமீ ஏற்பட்டு சடாரென முடிவெடுத்து 'முடித்துக்கொள்வார்கள்'.
தற்கொலை என்ற 'ரிஸ்க்'கான விஷயத்துக்குப் போகும் காரணிகள் என்னென்ன? எத்தனையோ பேருக்கு சொல்லமுடியாதத் துயரங்களும், தோல்விகளும், இழப்புகளும் ஏற்பட்டாலும் கூட, ஏன் ஒரு சிலர் மட்டுமே இந்த அபாயகரமான முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்? வாருங்கள்... பார்ப்போம்.!
பாலினம்
தற்கொலை பண்ணிச் சாவதில் பெண்களை மிஞ்சுவது... பாவம், ஆண்களே. ஆச்சர்யம், ஆனால் வழக்கம் போல உண்மைதான். ஆண்மகன் தற்கொலை பண்ணிக்கொள்வதென்பது பெண்களைவிட நான்கு மடங்கு அதிகம். ஆனால், அதே சமயம், 'தற்கொலை பண்ணிக்கொள்கிறேன் பேர்வழி' என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களில் பெண்களே அதிகம்! அதுவும் நான்கு மடங்கு அதிகம்.
வயது
பொதுவாக, வயது ஏற ஏற தற்கொலைக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. ஆனால், சமீபகாலமாக இளம் வயது தற்கொலையாளிகளின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே வருகிறது. (குறிப்பாக 15 முதல் 24 வரை வயதுடையவர்களின் எண்ணிக்கை) மிகுந்த கவலையளிப்பதான சமாச்சாரம் இது.
திருமண பந்தம்
யெஸ்... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுபவை மட்டுமல்ல. தற்கொலையைத் தடுக்கவல்ல வல்லமை வாய்ந்தவைகள் என்கிறது ஆய்வுகள். மனைவி, குழந்தைகள் என வாழ்க்கைக் கடலில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் நிரந்தரமாக. நீந்திக்கொண்டே இருப்பதற்காகக் கடலை நோக்கிப் போவது குறைவுதான். தனிமை, வேலையின்மை, திருமணம் ஆகாமல் இருத்தல் அல்லது திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்திருந்தால், கூடவே குடிப்பழக்கமும் சேர்ந்திருந்தால், அந்த மாதிரி நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 'ரிஸ்க்' மிக அதிகமே!
கல்வியும், தொழிலும்
அதிகம் படித்தவர்களிடத்திலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தான் முன்பு தற்கொலை பண்ணிக் கொண்டார்கள். தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதிகம் படித்தவர்களோ அல்லது படிப்பறிவே இல்லாதவர்களோ தற்கொலை 'ரிக்ஸ்'கில் எந்த வித்தியாசமும் இல்லை. வேலை இல்லாமல் இருத்தலும் தற்கொலையை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் ஒரு காரணமே.
தற்கொலை முறை
(ஹ§ம்.. இது வேறு என்கிறீர்களா?) பல முறைகள் இருந்தாலும் தூக்கில் தொங்கி உயிர் விடுவதே உலகம் முழுவதும் பரவலான தற்கொலை முறையாக உள்ளது. துப்பாக்கிகள், மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கார்பன் மோனாக்ஸைடு பாய்சனிங் மூலம் சாவது இப்படிப் பல முறைகள் உலகெங்கும்!
சமூக ரீதியான, குடும்ப ரீதியான காரணங்கள் என எப்படி இருந்தாலும் மனநோய் மற்றும் உடல் நோய் ஆகிய இந்த இரண்டு விஷயங்களுமே தற்கொலைக்கான முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.
யெஸ்... பெரும்பாலான தற்கொலைகளை ஆய்வு செய்து பார்த்ததில், அந்த நபர்கள் உடல் உபாதைகளை, சொல்ல முடியாத அளவில் அனுபவித்து இருப்பது தெரிய வந்தது. இன்னும் சொல்லப்போனால், செத்துப் போனவர்களில் 32 சதவிகிதம் பேர் கடந்த ஆறு மாத காலத்தில் ஏதோ ஒரு முக்கியமான உடல் கோளாறுகளுக்காக மருத்துவரைச் சந்தித்து இருக்கிறார்கள். உதாரணமாக, 'தனக்கு அபாயகரமான புற்று நோய் இருக்கிறது' என்று தெரியவந்த ஒரு வருடத்துக்கு ஐம்பது சதவிகிதம் பேர் தற்கொலை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பிட்ட சில நோய்களால் தாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தற்கொலைக்கான சாத்தியக் கூறுகள் அதிகமே என்கிறது ஆய்வு. உதாரணமாக, ஜீரண மண்டல வியாதிகள் என்று எடுத்துக் கொண்டால் அல்சர் (ஆச்சரியம்... ஆனால் உண்மை) ஈரல் நோய். சின்ன சமாச்சாரமாகத் தான் இருக்கும், ஆனால் இம்சை அதிகமாகக் கொடுக்கும். அந்த வகையில் ஒன்றுதான் குடல்புண் அல்லது பெப்டிக் அல்சர்!
மூளை நரம்பியல் மண்டலத்தை எடுத்துக் கொண்டால், வலிப்பு நோய், தலையில் அடி படுதல், மூளை மழுங்குதல் மற்றும் எய்ட்ஸ் நோயால் அவதியுறும்போது ஏற்படும் மூளை பாதிப்புகள்.. இவையெல்லாம் தற்கொலையில் முடியும் 'ரிஸ்க்' அதிகமே!
மனநலக் கோளாறுகள் காரணமாகத் தற்கொலை
உடல் நோய்களின் காரணமாகத் தற்கொலை ஒரு புறமென்றால், மனநோய் பாதிப்புகளால் தங்களை மாய்த்துக் கொள்பவர்கள் எத்தனையோ பேர்! சரியாகச் சொன்னால் தற்கொலை பண்ணிக் கொண்டவர்களில் 95 சதவிகிதம் பேருக்கு ஏதேனும் ஒரு வகையில் மனக்கோளாறு இருந்தே இருக்கிறது. அதிலும் மனச்சோர்வு நோயே பிரதானம் (80%) மனச்சிதைவு நோய் (schizophoenia இது ஒரு 10%) மற்றும் வயதாவதால் ஏற்படும் மூளை மழுங்கிப் போதல் (Dementia) இது ஒரு 5% இப்படிப் போகிறது லிஸ்ட்.
எல்லாவற்றையும் பிரித்தறியும் மருத்துவம் தற்கொலைகளையும் மூன்றாகப் பிரிக்கிறது. (Durkheim's Theory)
- ஒன்று Egoistic தற்கொலைகள். சமூகத்தின் எந்தப் பிரிவுடனும் ஒட்டுறவில்லாத வாழ்க்கை வாழும் நபர்கள் சந்திக்கும் தற்கொலை இந்த விதம். உதாரணமாக, கிராமப் புறங்களில் பார்த்தால் கிராமமே ஒரு குடும்பமாக வாழும் முறை இன்னமும் இருக்கிறது. பக்கத்து ப்ளாட்காரர் என்ன நிறம்? என்ன பேர்? என்று தெரியாத நிலை நகரங்களில் இருக்கிறது. ஆக, நல்ல இணக்கமான உணவு முறைகள் தற்கொலை எண்ணத்துக்கு எதிரியே!
- இரண்டாவது attruistic என்பது போரில் உயிர் துறக்கும் அல்லது தன் கொள்கையை, கூட்டத்தைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் தன் போர்ப்படைத் தலைவனுக்காக, கொண்ட கொள்கையில் தோராயமாகத் தோல்வி வரும் பட்சத்தில் அதைச் சந்திக்க வேண்டாமென்று அதனினும் மாற்றாக தற்கொலையை ஒரு வீரன் தேர்ந்தெடுத்தால், அது தான் இந்த வகை. மற்றொரு வகையில் சொன்னால், ஒரு 'குரூப்'புடன் ஏற்பட்ட அதிகப்படியான ஒருங்கிணைப்பை இதற்குக் காரணமாகச் சொல்லலாம்.
- மூன்றாவது amonia வகை. அதாவது, பொருளாதார ரீதியாகப் பெருத்த நஷ்டமடைந்த பெரும் செல்வந்தர் எப்படி நினைப்பார்? 'தன்னை இந்தச் சமுதாயம் முன்பு போல் பார்க்காதே... முன்பு போல் தன்னால் இந்தச் சமுதாயத்தோடு பின்னிப் பிணைய முடியாதே... அவ்வளவுதான் என் மரியாதை! என்ற ரீதியில் யோசித்து ''கிளம்பி'' விடுவார். ஒரு சமுதாயத்துடனான தன்னுடைய இணக்கம் உடைந்து, சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக கற்பித்துக் கொள்பவர்களின் முடிவு இந்த வகை. தற்கொலையின் வகைகள் இப்படி இருந்தாலும், தற்கொலை பண்ணிக் கொள்வதன் தெளிவான Motive என்ன? அவர்களின் எண்ணம் எப்படி இருந்திருக்கும்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? அவர்கள் சொல்லும் 'மெசேஜ்' என்ன? இது குறித்தும் மன நல மாமேதைகள் ஆய்ந்து வந்திருக்கின்றனர்.
குறிப்பு : மனசில் இருக்கிறது இறக்கிவையுங்க அப்பு , என்னத பெரிசா கொண்டுப்போகப் போறோம். வாழுவோம் வாழவைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக