பெயர்: ஆர்குட்
வயது: மூன்று
என்னைப் பற்றி: கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ‘ஆர்குட் புயுக்கோக்டென்’ ஜஸ்ட் ஜாலியாக என்னைக் கண்டு பிடித்தார்! இன்று எனக்கு உலகம் முழுவதும் 49 மில்லியன் நண்பர்கள்! உலகளவில் அதிகமாகப் பயன்படும் வலைத்தளங்களில் எட்டாவது இடம் எனக்கு. எல்லோரும் என்னில் இலவசமாக உலவலாம்... உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடிக்கலாம்!
மதம்: எம்மதமும் சம்மதம்!
மொழி: எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளும்!
இங்கே எதற்காக: நட்பு, அரட்டை, கடலை, காமம், காமெடி, செய்தி, பாராட்டு, திட்டு என எதற்காகவும்...
முதலில் ப்ளஸ்கள்!
எந்தக் கண்டத்தில் இருந்தாலும், ஆர்குட்டில் இருந்தால் ஒற்றைப் பெயரை வைத்துக்கொண்டு விட்டுப்போன நண்பனைத் தேடிப் பிடிக்க முடிவது முக்கியமான ப்ளஸ். நம்மைப் போலவே எண்ணங்கள் கொண்டவர்களுடன் புதிதாக நட்புகொள்ள முடிவது இரண்டாவது நன்மை!
சரி, மைனஸ்கள்..?
நம் ஆர்குட் ஆல்பத்தில் நாம் போட்டு வைத்திருக்கும் புகைப்படங்களை எவர் வேண்டுமானாலும் ‘டவுன்லோட்’ செய்து, அதைக்கொண்டு கிராஃபிக்ஸ் செய்து, சும்மா புகுந்து விளையாடலாம். நமக்கே தெரியாமல் நமது பெயரையும், புகைப்படங்களையும், விவரங்களையும் வைத்துக்கொண்டு அக்கவுன்ட் ஆரம்பித்து, சேட்டை பண்ணலாம். ஏன்... நம் அக்கவுன்ட்டையே ‘ஹேக்’ (கடத்தி!) செய்து, நமது நண்பர்களுக்கு ஆபாசமான, விபரீதமான செய்திகளை அனுப்பலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நட்பின் ஆழத்தையும் மூன்றாவது நபரால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த நட்பு வெப்சைட் புண்ணியத்தால் பல முன்னாள் காதல்கள் (திருமணமான பின்னரும்கூட) ஆங்காங்கே மீண்டும் சேர (சோர?) ஆரம்பித்திருக்கின்றன. இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் தேசப் பாதுகாப்பையும், கலாசாரப் பாதுகாப்பையும் காரணம் காட்டி ஆர்குட்டைத் தடை செய்திருக்கிறார்கள்.
தகவல் கடலாக விரிந்துகிடக்கும் ஆர்குட்டில், ‘ஏன் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே இருக் கிறது?’ என்று நிபுணர் கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், ‘பக்கார்டிக்கு எது பங்காளி பெஸ்ட் மிக்ஸிங்?’ என்று குடிமகன் கருத்தை அறிந்துகொள்வதும் அவரவர் இஷ்டம்!
மொத்தத்தில், ஆர்குட் கைப்பிடி இல்லாத கத்தி! பார்த்து, பத்திரமா, பாதுகாப்பா பயன்படுத்திக்கோங்க!- -
நன்றி : ஆனந்தவிகடன்
ஞாயிறு, 29 ஜூலை, 2007
திங்கள், 16 ஜூலை, 2007
கதம்பம் 16 - July - 2007
வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாய் இருப்பது. நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ வைப்பது. உலகம் முழுவதையுமே புன்னகைப் பூக்களால் நிரப்புவது."
இன்று படிப்பு ஒரு பதட்டம்.
தேர்வு ஒரு பதட்டம்.
பள்ளிக்குச் செல்லுதல் ஒரு பதட்டம்.
மதிப்பெண்கள் வரும்போது மனம் எல்லாம் நடுக்கம்.
….
எதிலும் பதட்டம் எங்கும் பதட்டம்….
நாம் ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்துடனே அமர்ந்து இருக்கிறோம். திட்டமிட்டு வாழ்ந்தால் குழப்பமும் இல்லை. நடுக்கமும் இல்லை.
நகைச்சுவை என்பது பதட்டத்தைக் குறைக்கும். அது உற்சாகத்தை அதிகப்படுத்தும். தினமும் சிரிக்கத் தகுந்த செய்திகளை நாம் வாசிக்க வேண்டும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குச் சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளை முறுக்கேற்றும். காற்று போல் உடலைக் கனமிழக்கச் செய்யும். நுண்ணறிவைச் செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம்.
மகத்தான மனிதர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தவர்கள் தான்.
ஹென்றி வார்ட் பீச்சர் என்கிற பேச் சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு துண்டுக் காகிதம் அவரைத் தேடி வந்தது. அதில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தது. உடனே பீச்சர், ‘‘யாரோ தன் பெயரை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அறிவித்தார்.
புத்திக்கூர்மை உள்ளவர்கள் வசவுகளைக்கூட வாழ்த்து களாக மாற்றிக் கொள்வார்கள்.
பெர்னாட்ஷாவும், செஸ்டர் டன்னும் நெருங்கிய நண்பர்கள். செஸ்டர்டன் பருமனானவர். ஷா ஒல்லியானவர். இருவரும் ஒரு முறை தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது செஸ்டர்டன் ‘‘உங்களைப் பார்ப்பவர்கள் நம் நாட்டில் ஏதோ பஞ்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்’’ என்று ஷாவிடம் சொன்னார். அதற்கு, ‘‘உங்களைப் பார்த்ததும் அதற்கு யார் காரணம் என்று கண்டுகொள்வார்கள்’’ என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார் ஷா.
நகைச்சுவை உணர்வு கசப்பைப் போக்கிக் களைப்பை நீக்கி புத்துணர்வு தரும். இன்று முதல், தினம் ஒரு நகைச்சுவையைப் படித்துப் பகிர்ந்து பலனடைவோம்.
நன்றி : சுட்டி விகடன் , வெ.இறையன்பு I.A.S

ஞாயிறு, 1 ஜூலை, 2007
உயில் என்றால்.....

உயில் என்றால் என்ன?
ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
உயில் --- கட்டாயம் என்ன ?
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் - எப்படி எழுதுவது?
‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’
உதாரணமாக
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
----
‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உயில்கள் பலவிதம்!
குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
உயில் எப்போது செல்லாமல் போகும்?
குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness சாட்சி
‘ஆன் லைன்’ உயில்
உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
நன்றி : நாணயவிகடன்.
வியாழன், 28 ஜூன், 2007
சைனாகார்களின் புதிய மொபைல் போன்
செம்மொழி - Classical Language
செம்மொழி என்பதன் பொருள் என்ன ?
செம்மொழி என்பதன் பொருள் ஒரு மொழியின் இலக்கியப்பழமை என்பதே ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்)
மேலும் ஜோர்ஜ் எல்.ஹார்ட் கூறியவையில் சில ...
தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)"
உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")
தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையொட நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலை நிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்.
சரி யார் இந்த ஜோர்ஜ் எல்.ஹார்ட் என்று கேட்கிறார்களா ?
அமெரிக்காவில் பெர்க்லி (Berkeley)வளாகத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் வறார்ட்.
மேலும் அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள
http://en.wikipedia.org/wiki/George_L._Hart
http://tamil.berkeley.edu/Tamil%20Chair/TamilChair.html
தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை ஜோர்ஜ் எல்.ஹார்ட்
இங்கே -
http://www.tamilnation.org/literature/classical.htm#Tamil_Translation
நன்றி விக்கிப்பிடியா,தமிழ்நெஷன்,பெர்க்லி

திங்கள், 25 ஜூன், 2007
கிளியோப்பட்ரா - பாகம் 4
ரோமானியர்களும் டோலமிகளும்
ஒரு பக்கம் நம்ம கிளி பாடம் கத்துக்கிட்டு இருக்க,அதே காலகட்டத்தில தான் சக்திவாய்ந்த மூம்முர்த்திகளான
ஜுலி சீசர்,பாம்பி மற்றும் கிரேஸஸ் ரோமாபுரியை ஆண்டுவந்தனர்.
பாம்பு எப்படி எகிப்தியரின் புனித சின்னமாக கருதப்பட்டதோ அதேப்போல கழுகு தான் ரோமானியர்களின் சின்னம்.
பின்னே சாம்ராஜ்ஜியமனு இருந்தா இந்த மாதிரி சின்னங்கள் இருப்பது எல்லாம் சகஜமான ஒன்னுதான !
பேராசை பிடித்து சண்டை போட்டு மற்றவர்களின் இடத்தை பிடித்தல் என்பது போருக்கு இன்னொரு அர்த்தமாக இருந்தது.இதில் ரோமானியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ?
எகிப்தின் வளம் டலாலடிக்க * * * அது ரோமானியர்கள் கண்னை உறுத்தாமல் இருக்குமா என்ன ?
இதனை அறிந்த நம்ம கிளியோட தந்தையாருக்கு உதார் எடுக்க ஆரம்பித்துவிட்டது.எதை சமாளிப்பது ஏற்கனவே
உள்நாட்டு கலவரம் அங்காங்கே தலைதுக்கதுவங்கியது,
மத்தலம் ஆகிடாரு நம்ம பன்னிரண்டாம் டோலமி.ஒருபக்கம் எகிப்து மக்கள் இன்னொரு பக்கம் ரோமானியர்கள்
தன்னை காப்பாத்திக்க ரோமானியர்கள் காலை முத்தமிட முன்வந்தார் நம்ம கிளியோட தந்தை.
அப்பே கிளிக்கு 10 வயசு இருக்குமுனு நினைக்கிறேன், கிளியின் தகப்பனார் ரோமானிய மூம்முர்த்திகளுக்கு ஒரு மடல்
வரைந்தார் ,அதுதாங்க மெயிலுனு ஆங்கிலத்தில சொல்லுவாங்கல
அந்த கடிதம் எப்படி இருந்திருக்குனுமுனு ஒரு கற்பனை
இடம் : டோலிமிகளின் மாளிகை
சக்தி படைத்த மூம்முர்த்திகளுக்கு,
இந்த சிறியவன் பன்னிரண்டாம் டோலமியின் அன்பான வணக்கம்.மூம்முர்த்திகளின் வீர தீர பராகிரம செயல்களை அறியாதவன் இல்லை இந்த பொடியன்.உங்களை எதிர்க்கும் துணிவும் தைரியமும் எகிப்திற்கு கொஞ்சமும் இல்லை அரசே, ஆகையால் நீங்கள் அனாவசிய கவலை கொள்ள தேவையில்லை அய்யா.
அப்பால ஒரு சின்ன வேண்டுகொள் , இப்பேயெல்லாம் மொத மாதிரி விளைச்சல் சொல்லிக்கிறப்பால பெரிசா ஒன்னும் இல்லை சாமியோ, இந்த எகிப்து பயலுங்க எதுக்கெடுத்தாலும் அரசர்களை சரியில்லை அரசர்களை சரியில்லைனே புலம்புறாங்க.
மழை பெயலனா கூட என் மேல குத்தம் சொல்லாறங்க சாமி, இந்த கொடுமைய நான யார்கிட்ட சொல்லி அழ.இந்த சமயத்தில நீங்க வேற போருனு வந்தா என் நிலைமை ரொம்ப மோசம் ஆகிடும் .அதனால ஏதாவது பார்த்து பண்ணுங்க ஜி.
இப்படிக்கு,
உங்கள் நேர்மையான விசுவாசி , அமைதிவிரும்பி,
பன்னிரண்டாம் டோலமி.
தொடரும் .....அடுத்த பதிப்பில் ரோமானியர்கள்கிட்ட இருந்து வந்த ரிப்ளை மெயில பார்ப்போம்...

வெள்ளி, 22 ஜூன், 2007
முதுமையை புரிந்துக் கொள்வோம்

வைதேகி தேசிகன்
ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. இப் பட்டியலில், 'முதியோர்' முக்கிய இடங்களைப் பெறுகின்றனர்.
தானாய் வந்த இந்த வாழ்க்கையைத் தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் வாழ்ந்து, அந்திமக் காலத்தில் பெரும் எதிர்பார்ப்புகளும், எதிர்பாராத தோல்விகளுமாக நாள்களைக் கழிக்கிறார்கள்.
இந்தியாவில் கூட்டுக் குடும்ப அமைப்பு நொறுங்க, நொறுங்க முதியோர்களின் சோகம் அதிகரித்து வருகிறது.
மேலை நாடுகளில் இளமைக் காலத்திலேயே தமது முதுமைப் பருவத்தைத் திட்டமிடும் போக்கும், முதுமையில் யார் தயவையும் எதிர்பாராமல் தாமே முதியோர் இல்லங்களில் கட்டணம் செலுத்தி அடைக்கலம் தேடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
மிகவும் உணர்வுப் பூர்வமான இந்தியாவில், இரண்டு தலைமுறைகள் மோதிக் கொண்டேயிருக்கின்றன.
ஏன் இப்படி ஒரு நிலை. இதற்குக் காரணம் இன்றைய நடுத்தர வயதினர் மட்டுமல்ல முதியோர்களும்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகள் நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் மட்டும்தான். மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் எல்லோருமே சம்பாதிக்க வேண்டிய நிலை. மிகவும் முடியாத வயதானவர்கள் தவிர எல்லோருமே உழைக்க வேண்டும். ஓயாமல் வேலை செய்து களைத்துப் போனவர்கள் ஒரு பிடி சோறு கிடைத்தவுடன் தூங்கப் போய் விடுவார்களே? பின்பு ஏது பிரச்சினை? அதே போல வசதி மிகுந்த குடும்பங்களில் அவரவர் வேலை அவரவர்களுக்கு. அதனால் வீண் பிரச்சினைக்கே இடமில்லை.
வயது ஏற ஏற தன்னைத்தானே உணர்ந்து கொள்ளத் தெரிய வேண்டும். தன் நிலை புரிய வேண்டும். கையில் ஏதாவது பணமிருந்தால் அது தான் இருக்கும் வரை வேண்டுமே என்ற எண்ணத்துடன் பத்திரப்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.
தன் பிள்ளைகள் தங்களை மதிக்க வேண்டும், தங்களின் வார்த்தைகளைக் கேட்டு நடக்க வேண்டும் என்று எண்ணும் பெரியவர்கள், தங்களின் பிள்ளைகளை முழுமையாகப் புரிந்து கொண்டோமா என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து அதற்கு தன்னால் எப்படி தீர்வு காண முடியும் என்பதையும் ஆலோசிக்க வேண்டும். அதே போல இனி நாளை முதுமை என்னும் 'அந்தி' நேரத்தில் காலடி எடுத்து வைக்கப்போகும் இன்றைய நடுத்தர வயதினர் முதியவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயல்வதுடன் - குடும்ப விஷயங்களை மனம் விட்டுத் தன் பெற்றோரிடம் பேச வேண்டும். அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனாலும், தன் பிள்ளைகள் தங்களின் கருத்துகளைக் கேட்கிறார்களே என்ற ஒரு நிறைவு அவர்களுக்குத் தரும் வழி இது. பிரச்சினை இல்லாத வீடு எது? நாம் நினைத்தால் எத்தனையோ பிரச்சினைகளிடையே நம்மைப் பெற்று வளர்த்தவர்களை அவர்கள் கடைசி காலத்தில் காப்பாற்றுவது நம் கடமையில்லையா?
சென்னை நீலாங்கரையில் உள்ள 'விச்ராந்தி' என்னும் வயது முதிர்ந்த பெண்களுக்கான முதியோர் இல்லத்தைத் துவங்கி நடத்தி வரும் திருமதி. சாவித்திரி வைத்தி அவர்களிடம் 'விச்ராந்தி' பற்றிக் கேட்டபோது....
'இன்று 'விச்ராந்தி' யில் 110 வயது முதிர்ந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் படுத்த படுக்கையாக எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ள பெண்களும் உண்டு. முன்பெல்லாம் ஆதரவற்றவர்களும், ஆண் வாரிசு இல்லாதவர்களும் மட்டும் தான் இதில் சேருவதற்காக வந்தனர். பின்னர் மகனை இழந்த அன்னையர்கள் சேர்ந்தனர். ஆனால் இன்றோ மகன் உயிருடன் இருக்கும் போதே ஒதுக்கப்பட்டு வந்து சேர்பவர்களும் உண்டு. வேறு வழியே இல்லை என்று விதியை நொந்து வருவோரை சேர்த்துக் கொள்ளாமல் என்ன செய்வது?
எல்லாப் பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் பாட்டிகளுக்குப் புதிய துணிமணிகள் தரப்படும். நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஜனவரி முதல் தேதியும் பிரமாதமாகக் கொண்டாடப்படும்.
படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்குப் பணி செய்ய ஆட்கள் உள்ளனர். இங்குள்ளவர்கள் இறந்து போனால் அவர்களின் விருப்பப்படி ஈமச்சடங்குகளும் செய்யப்படும்'' என்றும் திருமதி. சாவித்ரி வைத்தி தெரிவித்தார். அவரே தன் கைகளினால் ஈமச்சடங்குகளையும் செய்கிறார் என அறிந்தபோது மனம் நெகிழ்ந்து போனது. முதுமையைப் புரிந்துகொண்டு, அதை வரவேற்க நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம்.
நன்றி : ஆறாம்திணை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)