வியாழன், 14 ஜூன், 2007

கிறுக்கனின் கிழிசல் - 2

காதலியைப் போல
வரைய முற்பட்டேன் கவிதையை
தோற்றுப்போனால் காதலி

கிறுக்கனின் கிழிசல் - 1

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 2


புட்டோலமிகள் பற்றி

அலெக்சாண்டர் என்னும் மாவீரனை யாரும் மறக்கமுடியாது...ஆம் சும்மா போரும் படையுமா இருப்பாரே
அதே பாரகிரமசாலி அலெக்சாண்டர் தான்.இவரு எகிப்தையும் விட்டுவைக்கவில்லை,எகிப்தின் அரசனாக தன்னை மகுடம் சுட்டிக்கொண்டார்.
இந்த அலெக்சாண்டருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு என்னா ? எந்த நாட்டைப் புடிச்சாலும் அங்கே
அலெக்சாண்ரியா என்னும் நகரத்தை உருவாக்குவாரு !!!!
நம்ம அலெக்ஸ் மண்டயப்போடும் போது மொத்தம் 29 அலெக்சாண்ரியா நகரங்கள் இருந்தாதாகச்சொல்லப்படுகிறது.
என்ன கொடுமை அலெக்ஸ் !!!

அந்த 29 அலெக்சாண்ரியா நகரங்களிலே மிகவும் அழகானதாக கூறப்படும் நகரம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாத்தானாம் !!!
பாவம் நம்ம அலெக்ஸ் போர் போருனு சுற்றி.. இதனை அனுப்பவிக்கமுடியாம 33 வயசிலே இறைவனடி சேர்ந்தார்.

என்னடா இவன் கிளியோப்பட்ராவில் ஆரம்பிச்சு அலெக்சாண்டர் கிட்டப்போறானு தோன்னுதா ,இதோ வரேன்...எல்லாம் ஒருக்காரணமாத்தான் .

நம்ம அலெக்ஸ்க்கு பலதளபதிகள் உண்டு , அதில் ஒருவன் தான் புட்டோலமி, இந்த மவராசன் தான்
நம்ம கிளியோடா மும்பாட்டனாருனு சொல்லாம்.அலெக்ஸ்க்கு பின்னால் ,எனக்கு உனக்குனு ஆரம்பித்தது ஆட்சிச்சண்டை,
சாமர்த்தியசாலி புட்டோலமி லாவகமாக எகிப்தை சுருட்டிக்கொண்டார் !!!

புதன், 13 ஜூன், 2007

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 1

பதிவுக்கு காரணம் :சமிபத்தில் படித்த புத்தகம் அவ்வளவே.
குறிப்பு : இதில் எதேனும் தவறு இருப்பின் நண்பர்கள்,சான்றோர்கள் உதவீர்கள் என்ற எண்ணத்தில் யதார்த்த நடையில் நான் படைக்கும் முதல் சரித்திரச்சம்பந்தப்பட்ட பதிப்பு.

இனி கதைக்கு போகலாமா ?

ஆமாங்கா நீங்க சரித்தான் ! கழுதைப்பாலில் குளித்தாக சொல்லப்படும் கிளியோப்பட்ராவேதான்.


கிளியோப்பட்ராவைப்பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு காலக்கட்டத்தில் நிலவின.

அவை..,


நீங்கள் நினைப்பது போல நம்ம கதாநாயகி ஒன்னும் பேரழகியெல்லாம் இல்லையாம் !!! சற்று குள்ளம் , சற்று பருமனான உருவம் , ஆனால் மிகவும் புத்திசாலியாம் !!!!:)

  1. ஒன்பது மொழிகள் பேசுபவள் !!!
  2. பல புத்தகங்கள் எழுதியுருக்கிறாள்.
  3. எகிப்தின் கடைசி ராணி.
  4. 19 வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவள்.
  5. பல ஆண்டுகள் , இரண்டு ரோமானியர்களின் துணைக்கொண்டு ஆட்சி செய்தவள்.

கிளியோவின் மூதாதையைர்கள்
கிளியோப்பட்ரா எகிப்தின் ராணி, ஆனால் அவளின் புர்விகம் மசிடோனியா.

அவளின் குடும்பப்பெயர் புட்டோலமி(Ptlomy),புட்டோலமிகள் மசிடோனியாவாசிகள்.

புட்டோலமிகள் 300 வருடங்கள் எகிப்தில் இருந்தாலும் அவர்களை எகிப்து மக்கள் வேற்று நாட்டவராகத்தான் கருதினர்.! :(

புட்டோலமிகள் பற்றி ஒரு சில செய்திகளை அடுத்தபதிப்பில் ....

நன்றி : படங்கள் விக்கிப்பிடியா.
நன்றி : இறவா புகழ்ப்பெற்ற கிளியோப்பட்ராவும் அவளின் பாம்பும்...(சரியா மொழிப்பெயர்த்திருக்கேனா : :)
(Dead Famous Clepatra and her Asp)

செவ்வாய், 12 ஜூன், 2007

பழங்களில் உள்ள சத்துகள்

மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.

ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்
பப்பாளிப் பழம்
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நெல்லிக்கனி
வைட்டமின் சி
600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

கொய்யாப்பழம்
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.
சாத்துக்குடி
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
எலுமிச்சை
கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.
கறுப்பு திராட்சை
வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை
வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.
போரிச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
சப்போட்டா
மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
வாழைப்பழம்
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.
ஆப்பிள்
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.
தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.
புளி
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
சீத்தாப் பழம்
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம் பழம்
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.

நன்றி Modern Tamil World

யுகம்

யுகம் என்றால் என்ன ?

யுகம் என்பது இந்துக்களின் கால அளவை முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:

  • கிருதயுகம்
  • திரேதாயுகம்
  • துவாபரயுகம்
  • கலியுகம்

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

நன்றி விக்கிபீடியா


வியாழன், 7 ஜூன், 2007

வாசிப்பது கிறுக்கன் - பணவீக்கம் ? எளிமையான விளக்கம் !

இது வணிக உலகதில் புதிதாக கால்லேடுத்துவைப்பவர்களுக்கு ....

எப்போதோ படித்தது உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே வெட்டி ஒட்டியிருக்கேன்.

பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ§களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ‘வெயிட்டை’ அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
------------
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.


நன்றி : நாணயவிகடன்
பதிப்பு : மார்ச் 2007