சில
கனவுகள் கனவுகளாக இருக்க மட்டுமே மகிழ்ச்சி,
நினைவுகளின்
வன்மை கனவுகளுக்கு பிடிக்காது.
அவை
எப்போது அதன் வெப்பத்தில் நீந்திக்கொண்டிருப்பவை.
கனவுகளுக்கு
தாங்கள் எப்போதும் கனவுகளாக இருக்கத்தான் ஆசை போலும்,
நாம் தான்
அதனை உடைத்து கரு கொண்ட கவிதைகளாக மாற்ற முயலுகிறோம்,
கவிதைகளும் அழகு தான்
ஏனென்னில்
கனவுகளின்
வசிகரத்தை தொடுவதின் மூலம் தங்களை பொருள் படுத்திகொள்கின்றன.
பொருள்
படுத்தும் எதுவும் நம்மை நிறைவு படுத்தும் என்பதனை உறுதியிட்டு கணிக்க இயலாது.
ஆகவே எனது
மன நிறைவை
கனவிலிருந்து
கவிதைகளாய் உருமாறும் கர்ப்ப காலத்தில் புதைத்து வைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக