புழு
துளையிடாத கத்தரி
நீரின்றி
மணல்
மணம்
மறக்கும் ஆறு
இனப்படுக்கொலைகளுக்கு
வித்திடும்
அணு
உலைகள்
வீச்சு
குறையாத
சாதி
சாயம்
- நன்னீர்
கலப்பு
திருமணங்கள்
அட்சதை
போடும்
ஞெகிழி
கூட்டங்கள்
மனமிறங்கா
மனிதம்
இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது
கிழியாத
பணத்தை நோக்கி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக