சனி, 8 மார்ச், 2014

கிழியாதா ? பணம்.

புழு துளையிடாத கத்தரி
நீரின்றி மணல்
மணம் மறக்கும் ஆறு
இனப்படுக்கொலைகளுக்கு
வித்திடும்
அணு உலைகள்
வீச்சு குறையாத
சாதி
சாயம் - நன்னீர்
கலப்பு திருமணங்கள்
அட்சதை போடும்
ஞெகிழி கூட்டங்கள்
மனமிறங்கா மனிதம்
இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது

கிழியாத பணத்தை நோக்கி.

முட்டைக்கு முன்

சில கனவுகள் கனவுகளாக இருக்க மட்டுமே மகிழ்ச்சி,
நினைவுகளின் வன்மை கனவுகளுக்கு பிடிக்காது.
அவை எப்போது அதன் வெப்பத்தில் நீந்திக்கொண்டிருப்பவை.
கனவுகளுக்கு தாங்கள் எப்போதும் கனவுகளாக இருக்கத்தான் ஆசை போலும்,
நாம் தான் அதனை உடைத்து கரு கொண்ட கவிதைகளாக மாற்ற முயலுகிறோம்,
கவிதைகளும் அழகு தான்            
ஏனென்னில்
கனவுகளின் வசிகரத்தை தொடுவதின் மூலம் தங்களை பொருள் படுத்திகொள்கின்றன.
பொருள் படுத்தும் எதுவும் நம்மை நிறைவு படுத்தும் என்பதனை உறுதியிட்டு கணிக்க இயலாது.
ஆகவே எனது மன நிறைவை

கனவிலிருந்து கவிதைகளாய் உருமாறும் கர்ப்ப காலத்தில் புதைத்து வைக்கிறேன்.

நித்தமும் யுத்தம்

எண்ணப் படுகொலைகளுக்கு பின்
சில எண்ணங்களில் ஒன்று மட்டும்
முந்தி போய் கருவறையில் சேர்ந்தது.
உருவம் பெற உழைத்தாக வேண்டும்.
வெற்றியின் கொடூர வடிவம், அகங்காரம்.
அதனை நீர்த்து போக நித்தமும் யுத்தம்
எண்ணப் படுகொலைகளுக்கு பின்.