புதன், 20 பிப்ரவரி, 2008

கற்றது தமிழ் - திரைப்படம் பல பார்வைகள்

கற்றது தமிழ் - திரைப்படம் பல பார்வைகள் ,
எனக்கு பிடித்திருந்தது படமும் சரி பாடல்களும் சரி ...
அதில் நான் ரசித்த பாடல்களில் இருந்து சில வரிகள்....


வாழ்கை என்பது வெட்டு கத்திவலிக்க வலிக்க தொட்டுப்பார்த்தேன்
குறுவெட்டு தோற்றத்தில் வலியை கொஞ்சம் வெட்டிப்பார்த்தேன்
இது வேறு உலகம் ஓஹோஇது பத்தாம் கிரகம் ஒஹோ
இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்
.........
எங்கு நோக்கினும் அம்மணம்ஏற்றுக்கொள்ளுமா என் மனம்ஆடித்திருக்கிறதே....
.............
எனக்கேன ஒரு பூமி வேண்டுமேதமிழ் தான் அங்கே வேண்டுமே
அட டா இது நடக்குமா ...
என் பூமி எனக்கு கிடைக்குமா அதுவரை என் மனம் பொறுக்குமாஎன் தமிழ் இனம் பிழைக்குமா ...
அகிலம் ஆண்டது எங்கள் தமிழ் இனம் .....அடுத்தவன் சீண்டிப்பார்க்கையில் எலும்பை நொருக்கும் எங்கள் தமிழ் குணம்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2008

பரஸ்பர நிதி(Mutual Fund) என்றால் என்ன? படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்’.

பரஸ்பர நிதி. மியூட்சுவல் ஃபண்ட். இப்போது பலராலும் பல இடங்களிலும் பரபரப்பாகவே பேசப்படுகிற வார்த்தைகள் ஆகிவிட்டன இவை. எல்லா தரப்பு மக்களுக்கும் இதன் மீது ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. காரணம், அது தரும் முதலீட்டு வாய்ப்புகளும், அதிலிருந்து கிடைக்கும் மிக அதிகமான வருமானமும் தான்.
சிலருக்கு பங்குச் சந்தை பற்றித் தெரியும். அதில் அனுபவம் உண்டு. அதனால், அவர்களே தரகரைத் தொடர்புகொண்டு, பங்குகள் வாங்குகிறார்கள். விற்கிறார்கள். அதன் மூலம் லாபமும் பார்க்கிறார்கள்.
வேறு சிலருக்கு அனுபவம் இல்லை. ஆனாலும், அதில் கிடைக்கிற லாபத்தினை நாம் ஏன் விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவறே இல்லை.
இன்னும் சிலருக்கு அனுபவம் மற்றும் ஞானமும் உண்டு. ஆனாலும் அவர்களால் பங்குகளை வாங்குவதையோ, விற்பதையோ செய்யமுடியவில்லை. காரணம், அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் ஈடுபட்டிருக்கும் வேலை, தொழில் அப்படி. அல்லது உடல் நிலை. அல்லது வயது அப்படி.
‘‘அய்யா, என்னிடம் ஆசையும் இருக்கிறது. அதற்கான நேரமும் கூட இருக்கிறது. என்னுடைய பிரச்னை வேறுவிதமானது. என்னால் சரியாக முடிவெடுக்க முடிவதில்லை. பங்குகளை வாங்க, விற்க எத்தனையோ தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் என்னால் தேட முடியவில்லை. சொல்லப்போனால், எந்தத் தகவல் எப்போது தேவைப்படும் என்பதே கூட பெரிய சவாலாக இருக்கிறது.’’
”நியாயமான பேச்சு. என்ன செய்யலாம்?’’
பங்குச் சந்தை வாய்ப்புகளையும் விடக்கூடாது. ஆனால் நாமாகச் செய்யவும் முடியவில்லை. இரண்டையும் சமாளித்து பணம் பண்ண ஏதாவது நல்ல வழியிருக்கிறதா?’’
‘‘இருக்கிறது.
காரில் போக ஆசை. வாங்க பணமும் இருக்கிறது. வாங்கியும் ஆகிவிட்டது. முதலாளிக்கு கார் ஓட்டத் தெரியவில்லை. அல்லது ஓட்டுவதற்கு அலுப்பாக இருக்கிறது. என்ன செய்யலாம்? ஓட்டுனர் வைத்துக்கொள்ளலாம். அவர், கார் ஓட்டுவதில் திறமைசாலி.
அதன்பின், நம்பாட்டுக்கு, காரில் ஏறி அமர்ந்துகொண்டு, எங்கே போக வேண்டும் என்று சொன்னால் போதும். அவர் போய்விடுவார். எந்த நெரிசலிலும், மழையிலும். வண்டி ஓடும் நேரம், படிப்பதோ, இசை கேட்பதோ, தூங்குவதோ அல்லது வேறு எதையுமோ நிம்மதியாகச் செய்யலாம்.
கார் ஓட்டுவதை மட்டுமா? வீட்டில் ஃபேனோ அல்லது ஏசியோ பழுதாகிவிட்டது. கூப்பிடு விவரம் தெரிந்தவரை. நேரமும் மிச்சம். தவறுகளும் நிகழாது. பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா? நல்ல டியூன் வாத்தியாரைத் தேடுகிறோம். பாட்டு, கராத்தே, டான்ஸ் எதுவானாலும் அதில் சிறந்தவர்களைக்கொண்டு நம் தேவைகளை முடித்துக்கொள்கிறோம்.
அதேதான் பங்குச் சந்தையிலும். விவரம் தெரிந்தவர்களை வைத்து பங்குகள் வாங்குவது, சரியான நேரங்களில் விற்பது. செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும், வல்லுனர் வைத்தா முதலீடு செய்ய முடியும்!’’
”நாம் ஏன் தனியாளாகச் செய்ய வேண்டும்? கூட்டுச் சேர்ந்து கொள்வோம். 50 பேர் 100 பேர் சேர்ந்தால், ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு என்றால் என்ன ஆச்சு?’’
”என்ன ஆச்சு?’’
”10 லட்சம் ஆயிற்றே!’’
”ஏன் 100 பேரோடு நிறுத்த வேண்டும்? 10 ஆயிரம் பேர் ஒரு லட்சம் பேர் சேரட்டுமே!’’
”சேர்ந்தால்?’’
”100 கோடி ஆகிவிடும்.’’
”அடேயப்பா!’’
”பிறகு.. அவ்வளவு பணத்தினையும் நிர்வகிக்க, சரியாக முதலீடு செய்ய, என்ன ஊதியம் கொடுத்தும் வல்லுனர் வைக்க முடியாதா என்ன?’’
”ஏன் முடியாது?’’
”அதுதான் செய்கிறார்கள். அதன் பெயர்தான் பரஸ்பர நிதி, மியூட்சுவல் ஃபண்ட்.’’
இப்படிச் செய்வதற்கென்றே தனி நபர்கள் அல்ல, புகழ் பெற்ற நிறுவனங்களே இருக்கின்றன. அவை வல்லுனர்களைத் தேடி வைத்துக்கொண்டு, பின் அழைப்பு விடுக்கின்றன.. ‘வாருங்கள்.. தாருங்கள் நாங்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்டி, உங்களுக்குத் தருகிறோம்’ என்று.
அப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள். இவை மற்றவர்களிடம் இருந்து பணம் திரட்டி, அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு லாபம் செய்துகொடுக்கும் வேலையைச் செய்கின்றன. இந்த வேலையில், வங்கிகளும் கூட ஈடுபட்டுள்ளன.
உதாரணத்திற்கு, நாம் முன்பு பார்த்த பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக், ரிலையன்ஸ் மணி, டாடா, பிர்லா நிறுவனங்கள், மிசிமிசிமி புருடென்ஷியல், ஹிஜிமி, பிராங்கிளின், இப்படி நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு, முதலீட்டாளர்களை, ’வாருங்கள், தாருங்கள்’ என்று கூவிக் கூவி அழைக்கின்றன.
இப்படி பரஸ்பர நிதியில் புரளும் மொத்த பணத்தின் அளவு என்ன தெரியுமா? பல லட்சம் கோடிகள். இதனை நிறுவனங்கள் அரசாளும் சொத்து என்பார்கள். ஆங்கிலத்தில் கிssமீsts ஹிஸீபீமீக்ஷீ விணீஸீணீரீமீனீமீஸீt. சுருக்கமாக கிஹிவிs.
மிக அதிகமான பணத்தினைப் பெற்று நிர்வகித்து வரும் நிறுவனம் தற்சமயம் ரிலையன்ஸ்தான். 77 ஆயிரத்து 764 கோடி ரூபாய். அடுத்த இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரு, 54 ஆயிரத்து 952 கோடி. மூன்றாம் இடத்தில் யு.டி.ஐ. 52 ஆயிரத்து 179 கோடி ரூபாய்.”

நன்றி : குமுதம்

செவ்வாய், 29 ஜனவரி, 2008

கடந்த சில மாதங்களில்(2007-2008) ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட செய்திகளில் என்னை பாதித்த சில நிகழ்வுகளைப்பற்றி இன்றைய கதம்பத்தில் உரையாடுவோம்.

1. வரதட்சணை கொடுமையால் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பட்ட மருமகள்

2. நிர்வாண பூசை சாமியார் கைது 2 பெண்கள் கொலை

3. டாக்டராக இருக்கும் கணவனிடம் டாக்டாராக இருக்கும் மனைவி படும் மனவுளைச்சல்

இதுனால எனக்கு என்ன ? நல்ல சம்பளம் நல்ல வேலை நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத சிந்தனை.நாம் நம்ம வேலைய பாத்துட்டு போகலாமே.ஏய் என்னது இது ! ... அப்படியெல்லாம் விட்டுடு போக கூடாது அது தப்பு (வடிவேலு தோரணையா தெரியுதா :) நமக்காக இலைனாலும் நமது சங்கதியினருக்காக நாம் நல்ல புரிதல் கொண்ட சமுதாயத்தை படைக்க வேண்டாமா ?

இந்த அடிப்படை மனமாற்றம் வேண்டுமுனு சொல்றேன். அதை சொல்ல நான் யார் , ஆன்மிக குரு வா ? இல்லை கார்பிரேட் குருவா ? இல்லை நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நல்லா இருக்கனுமுனு நினைக்கறவுங்களில் ஒருவன்(கொஞ்டம் பில்டப் ஒவராகிடுச்சோ !) ,

இதை பொதுநல நோக்கோடு பார்க்காமல் ,நாளைக்கு இதேப்போல் நமது குடும்பத்தில் நடக்காமல் இருக்க தவிர்க்கும் நடவேடிக்கையாகக்கூடப்பார்க்கலாம்.

கண்ணும் மனசும் சங்கடப்படும் போது பார்த்துட்டு சும்மா போக நான் கல்லோ மண்ணோ கிடையாது.

அதற்கு மேல் ஒன்றும் தேவையில்லை இந்த மாதிரி செய்திகளை பகிற.

தாழ்த்தப்பட்ட மக்களை தனது அதிக்காரப்பிடியில் வைத்திருக்கும் வக்கிரம் மிகுந்த மக்கள் மாதிரி தான் சில ஆண்களின் செயல்பாடு.படித்தவன் படிக்காதவன் என்று பேதமில்லை , பெற்ற கல்விக்கும் நடக்கும் நடத்தைக்கும் சம்பந்தமில்லை என்று நம்பும் படி தான் இருக்கு.அப்புறம் படிக்கிறது காசு பணம் சம்ப்பாதிக்க மட்டும் தானே , அப்புறம் எதுக்கு இவுனுங்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வேண்டிக்கடக்கு.

பெண்ணை ஆணாக உருவகப்படுத்தினால் அது வீரத்தனம் ஆனால் ஆண்னை பெண்ணாக உருவக்கப்படுத்தினால் அது கேழைத்தனம் பேடித்தனம் என்ன மூட்டாள்தனமான உருவகம், இந்த மாதிரி சின்ன சின்ன தப்பான புரிதல்கள் மெல்ல மெல்ல தப்பான அவிப்பிராயத்தை நமது மனதில் விதைத்து நாளை நமது செயல்பாடுகளில் நியாயம் காணுகிறது.திரும்ப திரும்ப பொய் உரைப்பதானால் அதனை உண்மையாக்கலாம் என்கிற ஹிட்லரின் யுக்தியைப்போல் தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

தாலிக்கட்ட தலையை கூனியும் பெண், கடைசி வரை அவனுக்கு அடிமை என்கிற உணர்வு எழுத்தப்படாத,சொல்லப்படாத சட்டமாக நமது சமுகத்தில் பரவியுள்ளது.

நான் தலைவன் எனக்கென்று ஒரு சில மடத்தனமான கோட்ப்பாடுகளும் கொள்கைகள் இருக்கலாம்.ஆனால் தலைவிக்கு அதெல்லாம் கிடையாது கூடாது.தலைவன் - தலைவி எனப்பது தானே அகப்பொருள். தலைவன் - சேவகி என்பதல்ல

கற்பனையும் கவிதையும் பாரட்ட தெரிந்தவன், நிஜமான நிகழ்வை ஏன் ரசிக்க கூட தயங்குக்கிறான். முரண்பாடு , முற்றிலும் முரண்பாடு.

அவளுக்கும் நம்மைப்போல உயிரும் உணருவும் இருக்கு என்கிற மனோபாவம் ஏன் இன்னும் நமக்கு புரிவதில்லை.
மனைவி மட்டும் தாயாய், தங்கையாய்,தோழியாய்,சேவகியாய்,கட்டிலிலே பரத்தையாய் இருக்கவேண்டும் என்று சொல்லும் நாம் ஒரு கணவன் மட்டும் ராமன் என்கிறவனுக்கு உருவகப்படுத்தி அவன் செய்யும் செயலை சந்தேகத்தீயில் தாரைவார்த்து நீயாப்படுத்துகிறோம்.
கடவுளை இழிவுப்படுத்துவது எனது நோக்கமல்ல அது என் தேவையுமில்லை.


சரி என்ன பண்ணலாம் , !

சிந்திக்க ஆரம்பிப்போம் எல்லோருக்கும் தன்மானம்,சுயகவுருவம் இருக்கும் என்பதை உணர்ந்து.

திங்கள், 7 ஜனவரி, 2008

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்!


உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ!
47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது.
உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!
உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின.
காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா.
மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்!
கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன.
தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்!
'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம். (Search in Youtube for more interest)
ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது.
உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!
தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.
''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!''
இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!

நன்றி : விகடன்