இந்த சமுதாயம், திருநங்கைகளையும் ஒரினச்சேர்கையாளர்களையும், மோசமானவர்களாவும் நகைப்புக்குரியவர்களாகவும் தான் பெரும்பாலும் சித்தரிக்க முயலுகிறது.
இது வரை நமது திரையுலகம் திருநங்கைகளை வில்லன்களாகவோ,விபச்சார தரகர்களாகவோ அல்லது நைய்யாண்டிக்கு உட்ப்படுத்த படுப்பவர்களாகவோ தான் பயன்படுத்திவந்துயிருக்கின்றன.
டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் படத்திலிருந்து
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
முதல்
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
முதல்
அமீரின் பருத்திவீரன்
ஊரோரம் புளிய மரம்… வரை.
இவர்களை முக்கிய கதை மாந்தர்களாக காட்டிய திரைப்படம் இன்னும் வரவில்லை என்கிற மனக்குறையை நீக்க வந்த திரைப்படம் தான் நர்த்தகி.
இத்திரைப்படத்தை இயக்கியவர் விஜய பத்மா.
இதற்கு முன் இவர்களைப் பற்றிய தெளிவை முன்வைத்தவர் சந்தோஷ் சிவன் , நவரஸா என்கிற திரைப்படத்தின் மூலம், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1,1/2 மணிநேரப்படம்.
நவரஸா (2005) திரைப்படம் என்பது திருநங்கைகளின் உலகத்தை நமக்கு அறிமுகம் செய்த முகவரியாக பார்க்கலாம்.நவரஸாவில் பொரும்பாலான திருங்கைகளின் வாழ்க்கை முறையை காட்டுவதற்கான முயற்சி(High Level View).உதாரணத்திற்கு அரவான்,கூத்தாண்டவர் கேயிலின் வழக்கங்கள்,அப்போது அங்கே நிகழும் சம்பிரதாயங்கள்…இன்ன பிற..
நர்த்தகி(2011) திரைப்படத்திற்கும் நவரசா திரைப்படத்திற்கும் உள்ள ஒற்றுமை என்று பார்த்தால், இரண்டு கதை கருவும் திருநங்கைகளை பற்றியது.
நர்த்தகயின் கதை சுருக்கம் : பெரும்பாலானவர்கள் போல ஒரு குடும்பத்தில் வளரும் சிறுவன் பற்றி கதை(ஆரம்பமாகிறது).
அவன் தன்னுள் இருக்கும் அவளை உணரத்தொடங்கி,
அவளை அடைவதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொள்கிறான்,
அவனின் சிறுவயது காதல்,
அவனின் மாமன் மகள் இவன் மேல் வைத்திருக்கும் காதல்
,பின்பு தனக்கான வாழ்வு சூழலலை பெற்ற பின்பு ஏற்பட்ட காதல்.. இவ்வாராக கதை நகர்த்திச்சொல்யிருக்கிறார் இயக்குநர்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர், நர்த்தகயில் திருநங்கையாக நடித்த திருநங்கை கல்கி. A post graduate in Journalism and Mass Communication.
இவர் திருநங்கைகளின் நலன்களுக்காக போராடி வருபவர்.
..இப்படி கல்கிக்கு பல முகங்கள்.
கல்கியின் வலைப்பூ: http://kalki.tblog.com/
இவர் லிவிங் ஸ்மையில் வித்யா, இவர் எழுத்தாளராகவும்,உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். சில வருடங்கள் முன்பு இவரின் “நான்
வலைப்பூ: http://livingsmile.blogspot.com/
இவரை உங்கள் அனைவருக்கும் தெரிந்துயிருக்கும், இப்படிக்கு ரோஸ் என்கிற நிகழ்ச்சி தொகுப்பாளர்,
இவர் இந்தியாவின் முதல் திருநங்கை தொகுப்பாளர்.
இவர்களை புறம்தள்ளி ஒதுக்குவது நவீன தீண்டாமை.
(நவீன) தீண்டாமை ஒரு பாவச்செயல்;
(நவீன) தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
(நவீன) தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.
2 கருத்துகள்:
பாலியல் சிறுபான்மையினர் நலன் குறித்த இப்பதிவு அருமை சகோ. அவர்களுக்காக சேர்ந்து நாமும் குரல் கொடுக்க முனைவதே மனித செயலாகும். .............. !!!
வருகைக்கு நன்றி சகோ
கருத்துரையிடுக