செவ்வாய், 22 நவம்பர், 2011

ச்சீ

சீறு
பாய்
பிறாண்டு
கடி
வீல் என கத்தித் தொலை
தேவைப்படும் போது
வால் ஆட்டி நடி
நித்தியானந்த துறவு க்குள்
நினைத்த போது
உறவு கொள்ள
தெரியாமல் தேடி அலைந்த பின்
வியர்வை காய் ய துரோக நிழலில்
ஓய்வெடு
இத்தோடு நிறுத்திக் கொள்
கல் எறியாதே
என் மேல்
என்னாவது என் மானம்
ச்சீ மனிதா.

கேசுவர்

புதன், 14 செப்டம்பர், 2011

முதலுதவி

கல் – சுவர் - காதல்


அது மிக பெரிய மரமாக இருக்கலாம், கருகற்களால் ஆன சுவராக இருக்கலாம், சிறு கோவிலாக , சந்துகளாக, தெருக்களாக....... இன்னும் பலவாக இருக்கலாம்!.
இவைகளோடு நாம் கொண்டிருக்கும் காதல், இயற்கையின் மீது நமது ஆழ்மனதின் அக்கறையின் வெளிப்பாடாக இருக்கலாம் !?

அவ்வபோது கற்பனையில் அந்த இடங்களின் மீது நாம் செலுத்தும் மோகம் ,காதலினால் பெறப்பட்ட முத்தங்களை உள்வாங்கிய இன்புற்று இருந்த தருணங்களுக்கு ஒப்பானவைகளா கூட தோன்றுகின்றன!!.

இடங்கள் மேலான காதல் ரொம்ப அலாதியானது.
இடங்கள் பாகுபாடு பார்ப்பது கிடையாது.

அவை எப்போதும் ஒரு மெளன சாட்சியாக நம்முடைய குற்றயுணர்வுகளுக்கு நிழல் குடையாக இருந்து கொள்கின்றன.நாம் இடங்களை பிரியும் போது ஏற்படுகிற  தவிப்பு, மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை பாதியில் பிரித்து விடுதல் போன்ற கொடுமையான நிகழ்வு.

எப்போதும் இடங்கள், நம்மிடம் சதா பேசி கொண்டுத்தான் இருக்கின்றன , கவனித்து பார்த்தால் அவை பேசுவது கேட்கும்.எனக்கு அவைகளுடன் பேச வேண்டும் போல இருந்தது. யாருடன் பேசுலாம், சட்டேன ஞாபகத்துக்கு வந்துவிட்டது அந்த கல்லால் ஆன சுவரும், அதன் மேல் என் காதலும்.
 
ஆனால் நான் இப்போது வெளியூரில் அல்லவா இருக்கிறேன்,
சரி அதற்கு என்ன ? ஒரு கடிதம் எழுதி போட்டால் போச்சு என்று ஒருவாராக தேற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
அன்புள்ள கருங்கற்களால் ஆன சிறிய சுவரே,

நல்லாயிருக்கியா,நான் நல்லாயிருக்கேன்.என்னை ஞாபகம் இருக்கா ?, நான் தான் வெங்கிட்டு,அதான் வெற்றிவீட்டில குடியிருந்தோமே, எங்க அப்பா பேரு பொன்னுசாமி அம்மா பேரு கலா , இப்ப தெரியுதா நான் யாருனு.

உன்னை பார்த்து பேசி பத்து பனெண்டு வருசங்களுக்கு மேலே இருக்குமில்ல? அதனால தான் ஒரு கடுதாசியாவது போட்டு நீ எப்படி இருக்கனு தெரிஞ்சிக்கலாமுனு தோனுச்சு, இவ்வளவு வருசமா என்னை தேடியிருப்பலே ? தேடுனியா? உண்மைய சொல்லு? என்னோட தப்பு தான் உங்கிட்ட சொல்லாம போயிட்டேன், மன்னிச்சிடு சரியா?

உனக்கு ஞாபகம் இருக்கா எப்பவெல்லாம் மனசு ரொம்ப சரியில்லம போகுதோ அப்பவெல்லாம் உன்னிடம் தான் வந்து உக்காந்து இருக்கேன்.சில சமயம் ரொம்ப வெயில் அடிக்கும் போது, நீ பயங்கர கோவத்தோட என்னை ஒக்கார விடமாட்ட, வீட்டுக்கு போகச்சொல்லி விரட்டியிருக்க,அப்ப எல்லாம் ஒமேலே எனக்கு எவ்வளவு கோவம் வரும் தெரியுமா, ஆனாலும் சாய்ங்காலமே அந்த கோவம் நம்ம இரண்டு பேருகிட்டயும் போயிடும், உன் மேலே விளையாட உன்னை பார்க்க ஒடி வந்துடுவேன்.

உனது மடியில் நான் இளப்பாரிய அனுபவம் இன்னமும் என்னுள் இருக்கின்றன.

இப்ப எல்லாம் முனியப்பன் பண்டிகை நடக்குதா?
திரை கட்டி படம் போடுறாங்களா?
கபடி போட்டி நடத்துறாங்களா ?
உனக்கு புது ப்ரண்ட்ஸ் கிடைச்சிடுக்காங்களா ? எல்லாதையும் மறக்கமா எனக்கு பதில் கடுதாசியிலே எழுது சரியா.அப்புறம் உன்னோட ப்போட்டோவையும் சேர்த்து அனுப்பு.

இப்படிக்கு,
என்றோ உன்னிடம் விளையாடிய சின்னபயல்களில் ஒருவன்.

பிரிந்து வந்து எங்கோ நின்றாலும், வேர்களின் தேடல் சிறிதேனும் நாம் வாழ்ந்த இடங்களை நோக்கிதான் செல்லுகின்றனவோ?

புதிய இடங்கள் பழைய இடங்களாக மாற்றப்படுகிறபோது , மறைந்து இருந்த அவைகளின் மீதான காதல் வெளிவர தயங்குவதேயில்லை.

பிரிவின் தொடக்கம்
காதலாக ஆரம்பமாவது, புரிதலின் இயலாமையா ?
அல்லது வேறு ஏதோ ஒன்றா ?