புதன், 30 மே, 2007

வாசிப்பது கிறுக்கன் - இந்தியாவும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் !

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்றால் என்ன ?
தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்திற்கும், ஈழப் பகுதியான யாழ்ப்பாணத்திற்குமிடையில் உள்ள ஆழமற்ற கடல் பகுதியே 'பாக் நீரிணைப்பு' ஆகும். இந் நீரிணைப்பைக் கப்பல் போக்குவரத்திற்கேற்றவாறு ஆழப்படுத்திட உருவாக்கப்பட்ட திட்டமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பெயர்க்காரணம் ?
ராமநாதபுரத்தில் கி.பி. 18-19- ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்து வந்த தமிழ் மன்னர்களான சேதுபதிகளின் ஆட்சி எல்லைக்குட்பட்ட கடல் பகுதிக்குள் இக் கால்வாய்த் திட்டம் அமைவதால் இதற்கு 'சேது சமுத்திரத் திட்டம்' என்று பெயர் பெற்றது.

யார் வகுத்த திட்டம் ?
1860 - இங்கிலாந்து கப்பற்படைத் தலைவர் கமாண்டர் டெய்லர் என்பவரது திட்ட உருவாக்கம்.
வியாபார நோக்கத்துடன் இந்தியா வந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கடல் வழியாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவுடன் கிழக்கிலிருந்து மேற்கே செல்ல இலங்கையைச் சுற்றாமல் நேர் வழியாய் ஒரு கால்வாயைக் கடலுக்குள் வெட்டி அதன் வழியாகக் கப்பல்களைச் செலுத்தினால் என்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.அதன் விளைவாக ஆதாம் பாலம் பகுதிகளில் உள்ள மேடான பகுதிகளில் கடற்பாறைகளை வெட்டி ஆழப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் !
இந்திய வரலாற்றில் இதுவரை எந்தவொரு திட்டமும் சேது கால்வாய்த் திட்டம் போல பல முறை பல குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டதில்லை. இதற்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் இத் திட்டத்தின் இன்றியமையாத பயன்களை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அரசு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.

நன்றி ஆறாம்திணை.

மேலும் தகவலுக்கு - http://www.aaraamthinai.com/samugam/oorvalam0203/jn/jn22oorvalam.asp

கருத்துகள் இல்லை: