வியாழன், 31 மே, 2007

வாசிப்பது கிறுக்கன் - காபி மேசை வடிவிலான கணிணி




கணிணியுலக ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனம்
வெகுச்சிக்கிரமே காபி மேசை வடிவிலான கணிணியொன்றை
நவமர் 2007ல் அறிமுகப்படுத்தயுள்ளது.

அதை அவர்கள் சர்பேஸ் கம்புட்டர் (Surface Computer) என்று அழைக்கிறார்கள்.

பல தனியார் நிறுவனங்கள் இதனை வாங்குவதற்கு
இப்போதே அர்டர் செய்துள்ளன.

1. 30 inch திரை
2. தொடுத்திரை, நமது விரல்கள் கொண்டே இதனை இயக்கலாம் (ஆப்பிளின் I Phone போல)
3. மற்ற மின்னனு சாதனங்கள் உதா.கேமிராக்கள்,,, போன்றவை இதனுடன் வயர்லேஸ் முறையில் தொடர்புக்கொள்ளமுடியும்.
4. வழிக்காட்டிகள் (Maps)(பல நட்ச்திர ஒட்டல்கள் இதனை வாங்கத்திட்டமிட்டுள்ளன)
5. கணிணி விளையாட்டுக்கள்.
6. இசை,பாடல்கள் கேட்க்கலாம்...

தற்போது இதன் பயன்பாடு பெரிய நிறுவனங்களை நோக்கியுள்ளது.

விலை சுமார் இரண்டு முதன் நாலரை லட்சம் வரை தாங்க !!!!!

நன்றி : http://crn.com/crn/slideshows/2007/surface/1.jhtml?articleID=199703684

புதன், 30 மே, 2007

வாசிப்பது கிறுக்கன் - கூக்குள் யுடுப்புனின் ஒலி-ஒளியை

கூக்குள் யுடுப்புலில் இருக்கும் ஒலி-ஒளியை எப்படித்தரவிறக்கம் செய்வது ?

கூக்குள் யுடுப்புப்பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்,நம்மை ஆச்சரியப்படவைக்கும் ஒலி-ஒளி,
ரசிக்கவைக்கும் ஒலி-ஒளி,சிரிக்கவைக்கும் ஒலி-ஒளி,..இப்படிச்சொல்லிக்கொண்டேப்போகலாம்.

ஆனால் அவைகளை தரவிறக்கம் செய்யமுடியாது , அதற்கு பல நியாமானக்காரணங்கள் உள்ளன.

அதை நிவர்த்திச்செய்யும் வகையில் சந்தையில் பல வலைத்தளங்கள் இருக்கின்றன.

இந்த வலைத்தளங்கள் சென்று யுடுப்புனின் சுட்டியை தந்தால்,
அவை நமக்கு .FLV பைல்களாக திருப்பித்தரும் , இந்த .FLV பைல்களை
.AVI or MPEG ....அதாவது வீடியோ பைல்களாக மாற்ற பல் இலவசமென்பொருள்கள்
இருக்கின்றன.அவற்றைக்கொண்டு நமக்கு தேவையனா யுடுப்பு ஒலி-ஒளிகளை
நமது கணிணியிலோ அல்லது சிடி ப்ளேயர்களிலோ பார்த்து மகிழலாம்.

அப்படியில்லையேனில் இதோ ஒரு குறுக்கு வழி

1.இங்கே செல்லவும் http://vixy.net/
2. URL என்று இருக்கும் பெட்டியில் யுடுப்புனின் ஒலி-ஒளிகான சுட்டியை தரவும்.
3. சில நிமடங்களில் ...உங்களின் வீடியோ பைல்கள் தரவிருக்கத்திற்கு தயார்.
இதைவிட வேறு நல்ல வழிகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

நன்றி : கூகுள் தேடல். compress

வாசிப்பது கிறுக்கன் - இந்தியாவும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் !

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்றால் என்ன ?
தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்திற்கும், ஈழப் பகுதியான யாழ்ப்பாணத்திற்குமிடையில் உள்ள ஆழமற்ற கடல் பகுதியே 'பாக் நீரிணைப்பு' ஆகும். இந் நீரிணைப்பைக் கப்பல் போக்குவரத்திற்கேற்றவாறு ஆழப்படுத்திட உருவாக்கப்பட்ட திட்டமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பெயர்க்காரணம் ?
ராமநாதபுரத்தில் கி.பி. 18-19- ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்து வந்த தமிழ் மன்னர்களான சேதுபதிகளின் ஆட்சி எல்லைக்குட்பட்ட கடல் பகுதிக்குள் இக் கால்வாய்த் திட்டம் அமைவதால் இதற்கு 'சேது சமுத்திரத் திட்டம்' என்று பெயர் பெற்றது.

யார் வகுத்த திட்டம் ?
1860 - இங்கிலாந்து கப்பற்படைத் தலைவர் கமாண்டர் டெய்லர் என்பவரது திட்ட உருவாக்கம்.
வியாபார நோக்கத்துடன் இந்தியா வந்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கடல் வழியாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவுடன் கிழக்கிலிருந்து மேற்கே செல்ல இலங்கையைச் சுற்றாமல் நேர் வழியாய் ஒரு கால்வாயைக் கடலுக்குள் வெட்டி அதன் வழியாகக் கப்பல்களைச் செலுத்தினால் என்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.அதன் விளைவாக ஆதாம் பாலம் பகுதிகளில் உள்ள மேடான பகுதிகளில் கடற்பாறைகளை வெட்டி ஆழப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் !
இந்திய வரலாற்றில் இதுவரை எந்தவொரு திட்டமும் சேது கால்வாய்த் திட்டம் போல பல முறை பல குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டதில்லை. இதற்காக அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களும் இத் திட்டத்தின் இன்றியமையாத பயன்களை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அரசு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.

நன்றி ஆறாம்திணை.

மேலும் தகவலுக்கு - http://www.aaraamthinai.com/samugam/oorvalam0203/jn/jn22oorvalam.asp

ஞாயிறு, 27 மே, 2007

கிறுக்கனின் கிழிசல் - விளம்பரம்

இயற்கையின் தயாரிப்பில்....
மகத்துவமான உயிர்கள் அரங்கேற்றும்...
புற கண்களுக்கு புலப்படாதா
புவி ஈர்ப்பை மிறிய இடப்பெயர்ப்பு.
மிக விரைவில் ....
வெள்ளித்திரைகளில் அல்ல
உங்கள் மனத்திரையில்...


ஒளி ஒவியம்-காந்த கண்கள்,உரையாடல்-மொழி பேதமற்ற உணர்வுகள்,பாடல்கள்- எழுத்தப்படாத சொற்கள்,இசை-இதழ்கள்,இயக்கம்-இதயம்
ஆம் , இது *காதலுக்கான விளம்பரம் ...


* Subject to Market's Risk,விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.